தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே ஜே சுமாரிவாலா உலக தடகளத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தடகள சம்மேளனத்தின் தலைவராக டாக்டர் அடில்லே ஜே சுமாரிவாலா உலக தடகளத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சுமாரிவாலா உலக கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு மீண்டும் உலக கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது உலக தடகளத்தின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
Asia Cup 2023: உலகக் கோப்பை கனவு முடிந்தது: ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கப்படலாம்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசியாவின் சிறந்த தடகள சம்மேளனமாக இந்திய தடகள கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டது. ஆசிய தடகளத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டங்களை நினைவுகூரும் வகையில், பாங்காக்கில் நடந்த ஒரு மிளிரும் விழாவில், இந்தியாவின் சார்பில், ஒலிம்பியன் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற, இந்திய தடகளத் தலைவர் டாக்டர் அடில்லே ஜே சுமாரிவாலா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியக் கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!