இந்தியாவை விளையாட்டு தேசமாக மாற்றணும்! மத்திய அரசு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபினவ் பிந்த்ரா 5 ஆலோசனைகள்

By karthikeyan VFirst Published Sep 27, 2022, 10:17 PM IST
Highlights

இந்தியாவை விளையாட்டு தேசமாக மாற்ற மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார் அபினவ் பிந்த்ரா.
 

இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய அரசு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இடையேயான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில்  கலந்துகொண்ட இந்திய முன்னாள் தடகள வீரரும், ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவிற்கு முதல்முறையாக தங்கம் வென்று கொடுத்தவருமான அபினவ் பிந்த்ரா கலந்துகொண்டார்.

இந்தியாவில் விளையாட்டை மேம்படுத்தி, இந்தியா விளையாட்டு தேசமாக வளர்ச்சி பெற இந்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு 5 முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார் அபினவ் பிந்த்ரா. 

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தடகளத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்றும் ஆதரவை சுட்டிக்காட்டிய அபினவ் பிந்த்ரா, அதனால் தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அபாரமாக ஆடி பதக்கங்களை வென்றதை சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்..! ஆஸி., லெஜண்ட் மார்க் வாக் அதிரடி தேர்வு

இந்தியாவை விளையாட்டு தேசமாக மாற்ற அபினவ் பிந்த்ரா வழங்கிய 5 ஆலோசனைகள்:

1. ஆட்சியில் தடகள வீரர்களுக்கு பிரதிநிதித்துவம்

தடகள வீரர்களின் கோரிக்கைகளையும் குரல்களையும் பதிவு செய்ய ஏதுவாக அரசாங்கத்தில் தடகள வீரர்களுக்கு பிரதிநிதித்துவம் தரவேண்டும். தடகள வீரர்களுக்கா கமிஷன் அமைக்கவேண்டும். முடிவு எடுக்கும் அதிகாரத்தில் தடகள வீரர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும்.

2. இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் உறுப்பினர் அமைப்பு

ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய போட்டிகள் ஆகியவற்றிற்கான அமைப்புகளுக்கு மட்டுமே வாக்களிப்பு முறையில் உறுப்பினர்களை தேர்வு செய்யவேண்டும். மாநில ஒலிம்பிக் சங்கங்களுக்கு வாக்களிப்பு அற்ற முறையில் நேரடியாக உறுப்பினர்களை நியமிக்கலாம். வாக்களிக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒலிம்பிக் சாசனம், தேசிய விளையாட்டுக் குறியீடு மற்றும் தடகள ஆணையம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பவர்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

3. நிர்வாகத்தில் காசோலைகள் மற்றும் பேலன்ஸ்

இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு, நிர்வாக குழு, கமிஷன்கள் ஆகியவற்றின் நிர்வாகம் மற்றும் பொறுப்புகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் தெளிவாக வரையறுக்க வேண்டும். அவ்வாறு செய்ய, பொதுக்குழு தனிப்பட்ட அலுவலகப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒட்டுமொத்த நிர்வாகக் குழுவிற்கு மட்டுமே அதிகாரங்களை வழங்க முடியும்.

4. செயல்பாடு மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் ஒருங்கிணைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை

இந்திய ஒலிம்பிக் சங்க சட்ட விதிகளில், உள் மற்றும் வெளி கணக்கு தணிக்கைகள், அறிக்கைகள், பொது வெளிப்படைத்தன்மை ஆகியவற்றிற்கான சரியான கட்டமைப்பை பரிந்துரைக்கும் விதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க - டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் புவனேஷ்வர் குமாருக்கு ஸ்ரீசாந்த் உருப்படியான அட்வைஸ்

5. தகராறு தீர்வு மற்றும் விளையாட்டு வீரர்கள் நலனுக்கான நிறுவன வழிமுறை

சர்ச்சைகள், தகராறுகள், பிரச்னைகளை தீர்க்க விசாரணை அமைப்பு, குறைதீர்ப்பாளர், அற நெறியாளர், பாதுகாப்பு அலுவலர் ஆகியோரை நியமிக்க வேண்டும்.
 

click me!