டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்..! இங்கிலாந்து அதிரடி வீரரின் ஆருடம்

By karthikeyan VFirst Published Sep 27, 2022, 8:19 PM IST
Highlights

டி20 உலக கோப்பை அரையிறுதியில் எந்த 4 அணிகள் மோதும் என்று இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அணிகளும் டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன.

எனினும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இதே கருத்தைத்தான் கூறியிருக்கின்றனர். 

இதையும் படிங்க - டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கும் புவனேஷ்வர் குமாருக்கு ஸ்ரீசாந்த் உருப்படியான அட்வைஸ்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலுவான மற்றும் நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக திகழ்வதுடன், டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவான அணிகளாக உள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி பெரிய அணிகளையே வீழ்த்திவருகிறது.

தசுன் ஷனாகா தலைமையில் இளம் வீரர்கள் நிறைந்த அச்சுறுத்தும் படையாக இலங்கை அணி உருவெடுத்துள்ளது. எனவே டி20 உலக கோப்பையை வெல்ல அணிகளுக்கு இடையே போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

இந்நிலையில், எந்த 4 அணிகள் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் என்று இங்கிலாந்து அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்  அலெக்ஸ் ஹேல்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி..! கடைசி நேரத்தில் அதிரடி மாற்றம்

இதுகுறித்து பேசிய அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து அணி, ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்றும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆகிய 4 அணிகளும் தான் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் என்று அலெக்ஸ் ஹேல்ஸ் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

click me!