அந்த ஒரு விஷயத்துல எவ்வளவு முக்குனாலும் அக்ஸர் படேலால் ஜடேஜாவின் இடத்தை நிரப்பமுடியாது! முன்னாள் வீரர் கருத்து

By karthikeyan V  |  First Published Sep 27, 2022, 5:00 PM IST

ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை அக்ஸர் படேலால் பேட்டிங், பவுலிங்கில் நிரப்ப முடிந்தாலும், ஃபீல்டிங்கில் கண்டிப்பாக நிரப்ப முடியாது என்று அஜய் ஜடேஜா கருத்து கூறியுள்ளார்.
 


டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் மற்றும் 4 ஸ்டாண்ட்பை வீரர்கள் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

Latest Videos

undefined

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷமி..! கடைசி நேரத்தில் அதிரடி மாற்றம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆடாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணிக்காக சிறப்பான பங்களிப்பை செய்யக்கூடியவர் ரவீந்திர ஜடேஜா. அப்படியிருக்கையில், காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் டி20 உலக கோப்பையில் ஜடேஜா ஆடமுடியாமல் போனது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஆனால் அவரை மாதிரியான இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல், ஜடேஜாவிற்கு மாற்று வீரராக இந்திய அணியில் ஆடிவரும் நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் ஆடிய விதம், ஜடேஜாவை மிஸ் செய்யாத அளவிற்கு இருந்தது. அபாரமாக பந்துவீசிய  அக்ஸர் படேல், 8 ஓவர் போட்டியாக ஆடப்பட்ட 2வது டி20யில் 2 விக்கெட்டுகளும், 3வது டி20யில் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அக்ஸர் படேல் பேட்டிங்கும் சிறப்பாக ஆடக்கூடியவர். 

ஆனால் அவரால் ஃபீல்டிங்கில் ஜடேஜாவின் இடத்தை நிரப்பமுடியாது என்று அஜய் ஜடேஜா கருத்து கூறியுள்ளார். ஆஸி.,க்கு எதிரான டி20 தொடரில் 2 கேட்ச்களை தவறவிட்டார் அக்ஸர் படேல். அக்ஸர் படேல் 2 எளிய கேட்ச்களை தவறவிட்டது விமர்சனத்துக்குள்ளானது.

இதையும் படிங்க-  அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி

இந்நிலையில், ரவீந்திர ஜடேஜாவின் மாற்று வீரரான அக்ஸர் படேல் குறித்து பேசிய அஜய் ஜடேஜா, அக்ஸர் படேல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே அவரது தரமும் திறமையும் என்னவென்று நிரூபித்துவிட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொண்டார் அக்ஸர் படேல். ரவீந்திர ஜடேஜாவை நாம் மிஸ் செய்தாலும், ஒரு பவுலராக அவரை மிஸ் செய்யவில்லை. பவுலிங் யூனிட்டிற்கு அக்ஸர் படேல் வலுசேர்க்கிறார். ஆனால் ஃபீல்டிங்கில் ஜடேஜாவை அக்ஸர் படேலால் நிரப்பவேமுடியாது என்று அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
 

click me!