IND vs SA: டி20 தொடருக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்

By karthikeyan VFirst Published Sep 26, 2022, 10:10 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு அதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்கள் சிறந்த முன் தயாரிப்பாகும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது.

அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகிறது இந்திய அணி. செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்கிறது. செப்டம்பர் 28, அக்டோபர் 2 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. 

இதையும் படிங்க - அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி

டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி டி20 தொடர் இதுவென்பதால் டி20 உலக கோப்பையில் ஆடவுள்ள காம்பினேஷனுடன் தான் இந்திய அணி ஆடும். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் கண்டிப்பாக இடம்பெற்று விளையாடும் ஹர்திக் பாண்டியா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரும் இந்த தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. எனவே அவர்கள் இடத்தில் மட்டும் வேறு வீரர்கள் ஆடுவார்கள்.

ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள். வழக்கம்போல 3ம் வரிசையில் விராட் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் ஆடுவார்கள். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை. தீபக் ஹூடாவும் காயம் காரணமாக விலகியுள்ளார். எனவே தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள். 

ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இவர்கள் மூவருமே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால் இவர்கள் மூவரும் ஆடுவார்கள். 

இதையும் படிங்க - இதெல்லாம் ஒரு மேட்டரா தல? ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்த தோனி! ஃபாலோயர்ஸை பணமாக மாற்றும் தோனி

தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!