IND vs SA டி20 தொடர்: இந்திய அணியிலிருந்து விலகிய 2 வீரர்கள்.. ஷ்ரேயாஸ் ஐயர் சேர்ப்பு

By karthikeyan VFirst Published Sep 26, 2022, 9:37 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து முகமது ஷமி மற்றும் தீபக் ஹுடா விலகும் நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு அதற்கு முன் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்கள் சிறந்த முன் தயாரிப்பாகும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என வென்றது.

அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகிறது இந்திய அணி. செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 வரை இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது.

இதையும் படிங்க - அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி

செப்டம்பர் 28, அக்டோபர் 2 மற்றும் அக்டோபர் 4 ஆகிய தேதிகளில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் நடக்கின்றன. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி டி20 உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டபோதே அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ரிசர்வ் வீரராக எடுக்கப்பட்டிருந்த ஃபாஸ்ட் பவுலர் ஷமி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய தொடருக்கு முன் அவருக்கு கொரோனா உறுதியானதால் அந்த தொடரில் ஆடவில்லை. அவர் கொரோனாவிலிருந்து மீள இன்னும் கால அவகாசம் தேவை என்பதால், அவர் தென்னாப்பிரிக்கா தொடரிலும் ஆடவில்லை.

அதேபோல முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் தீபக் ஹூடாவும் தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகியிருக்கிறார். ஷமி மற்றும் தீபக் ஹூடாவிற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து, இனி வேறு அணி முறியடிக்க முடியாத சாதனையை படைத்த இந்தியா

தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், அர்ஷ்தீப் சிங், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!