சூர்யா(குமார்)வோட மிகப்பெரிய திறமையே அதுதான்..! விராட் கோலி புகழாரம்

By karthikeyan VFirst Published Sep 26, 2022, 7:12 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவின் பேட்டிங் திறமையை சீனியர் வீரர் விராட் கோலி வெகுவாக புகழ்ந்துள்ளார்.
 

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிட வல்ல வீரர் என்பதால் இந்தியாவின் 360 என அழைக்கப்படுகிறார் சூர்யகுமார் யாதவ். மிகச்சிறந்த திறமைசாலியான சூர்யகுமார் யாதவ், செம ஃபார்மில் அபாரமாக ஆடிவருகிறார். டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் முக்கியமான வீரராக திகழ்வார். இந்திய அணி ஜெயிக்க வேண்டுமென்றால் சூர்யகுமார் யாதவ் நன்றாக ஆடவேண்டும். அந்தளவிற்கு முக்கியமான வீரராக வளர்ந்துள்ளார்.

இதையும் படிங்க - அதை செஞ்சது என்னவோ நான் தான்.. ஆனால் செய்ய சொன்னது டிராவிட் Bhai..! போட்டிக்கு பின் சூட்சமத்தை உடைத்த கோலி

அண்மைக்காலமாக செம ஃபார்மில் அபாரமாக பேட்டிங் ஆடிவரும் விராட் கோலி, இங்கிலாந்தில் டி20 கிரிக்கெட்டில் முதல் சதமடித்தார். ஆசிய கோப்பையில் அபாரமாக பேட்டிங் ஆடினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் சிறப்பாக பேட்டிங் ஆடினார். 

3ம்வரிசையில் இறங்கும் சீனியர் வீரர் விராட் கோலியுடனான சூர்யகுமார் யாதவின் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு நம்பிக்கையளிக்கிறது. ஆஸி.,க்கு எதிரான 3வது டி20 போட்டியில் 187 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது, கோலி - சூர்யகுமார் யாதவ் இடையேயான 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 69 ரன்களையும், கோலி 48 பந்தில் 63 ரன்களையும் குவித்தனர். அதுதான் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

சூர்யகுமார் யாதவ் அடித்து ஆடியபோது, கோலி அவருக்கு சிங்கிள் எடுத்து கொடுத்ததும், இருவருக்கும் இடையேயான பரஸ்பர புரிதல் மற்றும் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யாருக்கு ஆடும்லெவனில் இடம்? விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன் ரோஹித்

இந்நிலையில், போட்டிக்கு பின் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் குறித்து பேசிய விராட் கோலி, என்ன செய்யவேண்டும், எப்படி ஆடவேண்டும் என்பதில் தெளிவுடன் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். எந்தவிதமான கண்டிஷனிலும், ஆட்டத்தின் எந்தவிதமான சூழலிலும் ஆடவல்ல வீரர். அதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இங்கிலாந்தில் அபாரமாக பேட்டிங்  ஆடி சதமடித்தார்.  ஆசிய கோப்பையிலும் அருமையாக ஆடினார். கடந்த 6 மாதங்களாக வேற லெவலில் ஆடிவருகிறார். எல்லா விதமான ஷாட்டுகளையும் ஆடுகிறார். ஆனால் எந்த ஷாட்டை எப்போது ஆடவேண்டும் என்ற அவரது தெளிவுதான், அவரது மிகப்பெரிய திறமையே. அவர் ஆடுவதை பார்க்க அருமையாக இருக்கும் என விராட் கோலி தெரிவித்தார்.
 

click me!