விராட் கோலி கேப்டன் இல்ல.. யுவராஜ் சிங்கிற்கு இடம்!! ஷாக் கொடுக்கும் இந்திய அணி

By karthikeyan VFirst Published Feb 26, 2019, 3:24 PM IST
Highlights

ரோஹித் - தவான் ஜோடியும் வெற்றிகரமான ஒருநாள் தொடக்க ஜோடியாக உள்ளது. 

ஓய்வு பெற்ற வீரர்கள் ஆல்டைம் விருப்ப அணியை தேர்வு செய்வது வழக்கம். சர்வதேச வீரர்களை உள்ளடக்கிய விருப்ப அணியை தேர்வு செய்வர். அந்த வகையில் எல்லா காலத்துக்கும் சிறந்த இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, எல்லா காலத்துக்கும் சிறந்த ஒருநாள் வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். 

இந்த அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். சச்சின் மற்றும் சேவாக் தொடக்க ஜோடி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றிகரமான தொடக்க ஜோடியாக இருந்தது. அதன்பிறகு ரோஹித் - தவான் ஜோடியும் வெற்றிகரமான ஒருநாள் தொடக்க ஜோடியாக உள்ளது. இந்நிலையில், ஆகாஷ் சோப்ரா, சச்சினுடன் சேவாக்கை தேர்ந்தெடுக்காமல் ரோஹித்தை தேர்வு செய்துள்ளர். ஒருநாள் கிரிக்கெட்டில் யாருமே செய்யாத அரிய சாதனையான 3 இரட்டை சதங்களை விளாசியுள்ள ரோஹித்தை சச்சினுடன் களமிறங்கும் தொடக்க வீரராக சோப்ரா தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசையில் முன்னாள் கேப்டன் கங்குலியையும் நான்காம் வரிசைக்கு தற்போதைய கேப்டன் கோலியையும் தேர்வு செய்துள்ளார். ஐந்தாம் இடத்திற்கு, இந்திய அணியின் நீண்டகால வெற்றிகரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக வலம்வந்த யுவராஜ் சிங்கை தேர்வு செய்துள்ளார். யுவராஜுக்கு பிறகு விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான தோனியை 6வது இடத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார். 

ஆல்ரவுண்டராக முன்னாள் கேப்டன் கபில் தேவை தேர்வு செய்துள்ள சோப்ரா, அவரது அணிக்கு கபில் தேவைத்தான் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின் பவுலர்களாக கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கையும், வேகப்பந்து வீச்சாளர்களாக ஜாகீர் கான் மற்றும் பும்ராவையும் சோப்ரா தேர்ந்தெடுத்துள்ளார். 

இந்த அணியில் பல கேப்டன்கள் உள்ளனர். சச்சினை தவிர கபில் தேவ், கங்குலி, தோனி, கோலி ஆகிய நால்வருமே வெற்றிகரமான கேப்டன்கள் தான். ஆனாலும் இந்த இந்திய அணிக்கு கேப்டனாக கபில் தேவை தேர்வு செய்துள்ளார் சோப்ரா. இந்திய அணிக்கு தோனி மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்திருந்தாலும், 1983ல் இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை வென்று கொடுத்தவர் கபில் தேவ் தான். அந்த வகையில், கபில் தேவை கேப்டனாக தேர்வு செய்துள்ளார் சோப்ரா. 

சோப்ரா தேர்வு செய்துள்ள ஆல்டைம் சிறந்த இந்திய ஒருநாள் அணி:

சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, கங்குலி, விராட் கோலி, யுவராஜ் சிங், தோனி(விக்கெட் கீப்பர்), கபில் தேவ்(கேப்டன்), ஹர்பஜன் சிங், கும்ப்ளே, ஜாகீர் கான், பும்ரா.
 

click me!