அனில் கும்ப்ளேவிற்கு பிடித்த இந்திய கேப்டன்!! கங்குலி இல்ல.. வேற யாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Feb 26, 2019, 2:48 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, தான் ஆடியதிலேயே யார் சிறந்த கேப்டன் என்று கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, தான் ஆடியதிலேயே யார் சிறந்த கேப்டன் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

அனில் கும்ப்ளே 1990ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 2007ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் 2008ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். இந்திய டெஸ்ட் அணிக்கு சிறிது காலம் கேப்டனாகவும் இருந்தார். கும்ப்ளே விலகியபிறகுதான் தோனி டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். 

சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பவுலர் மற்றும் இந்திய அளவில் முதல் பவுலர் என்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர் கும்ப்ளே. அசாருதீனின் கேப்டன்சியில் அறிமுகமான அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் கேப்டன்சியின் கீழ் ஆடியுள்ளார். 

பல்வேறு கேப்டன்களின் கீழ் கும்ப்ளே ஆடியிருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த கேப்டன் அசாருதீன் தான். அசாருதீனின் கேப்டன்சியின் கீழ் தான் கும்ப்ளே அறிமுகமானார். கங்குலியின் கேப்டன்சியின் கீழும் கும்ப்ளே நீண்டகாலம் ஆடினார். எனினும் அவருக்கு மிகவும் பிடித்த கேப்டன் அசாருதீன் தான். அசாருதீனின் கேப்டன்சியை கண்டு அந்த நேரத்தில் வியந்துள்ளார் கும்ப்ளே. 

அசாருதீன் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அசாருதீன், மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. 90 ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அசாருதீனின் சாதனையை தோனி 2014ம் ஆண்டு முறியடித்தார். அசாருதீன் 47 டெஸ்ட் போட்டிகளுக்கும் 174 ஒருநாள் போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
 

click me!