
பாரிஸ்: ஏற்கனவே வாழ்க்கையை வென்றவர்களுக்கிடையேயான போராட்டமாக பார்க்கப்படும் பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பல உத்வேகம் அளிக்கும் சாம்பியன்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ராக்கிங் ஸ்டார் யாஷின் கேஜிஎஃப் படத்தில் வரும், உலகில் தாயை விட பெரிய போர்வீரன் யாரும் இல்லை என்ற பிரபலமான வசனத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அதேபோல், இப்போது பிரிட்டனைச் சேர்ந்த 7 மாத கர்ப்பிணி வில்வித்தை வீராங்கனை ஒருவர் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
Paris Paralympics: பேட்மிண்டனில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று அசத்தல்
ஆம், பிரிட்டன் வில்வித்தை வீராங்கனை ஜோடி கிரின்ஹாம், பாரிஸ் பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணிப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் போட்டியில் ஜோடி கிரின்ஹாம் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் பகிர்ந்துள்ளது.
டெஸ்ட் போட்டியில் இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து; தொடரை கைப்பற்றி அசத்தல்
ஏழு மாத கர்ப்பிணியான 31 வயதான ஜோடி கிரின்ஹாம், டோக்கியோ பாராலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற தனது போட்டியாளரும் தோழியுமான ஃபோபே பீட்டர்சன் பைனை 142-141 என்ற கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்ற பிறகு பேசிய ஜோடி கிரின்ஹாம், "எனது ஆட்டத்திற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த இடத்தை அடைவது எளிதான காரியமல்ல. நான் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். நான் ஆரோக்கியமாக இருக்கும் வரை, என் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் வரை நான் போட்டியிட வேண்டும் என்று நினைத்தேன். எனது திறமைக்கு ஏற்ப ஆடினால் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது" என்று கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.