கடைசி நேரத்தில் ஐபிஎல் ஏலத்தில் நுழைந்த 5 வீரர்கள்!!

Published : Dec 18, 2018, 01:54 PM ISTUpdated : Dec 18, 2018, 01:55 PM IST
கடைசி நேரத்தில் ஐபிஎல் ஏலத்தில் நுழைந்த 5 வீரர்கள்!!

சுருக்கம்

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலத்தில் 346 வீரர்கள் இருந்த நிலையில், கடைசி நேரத்தில் 5 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் 351 வீரர்கள் ஏலத்தில் விடப்பட உள்ளனர். 

ஐபிஎல் 12வது சீசனுக்கான ஏலம் இன்று மதியம் 2.30 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்க உள்ளது. இதுவரை ஏலத்தை நடத்திவந்த ரிச்சர்ட் மேட்லி மாற்றப்பட்டு இந்த முறை ஹுஜ் எட்மேட்ஸ் ஏலத்தை நடத்த உள்ளார். 

அனைத்து ஐபிஎல் அணிகளுமே தாங்கள் தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே அறிவித்துவிட்டனர். அந்த வகையில் 346 வீரர்கள் ஏலம் விடப்பட இருந்தனர். கடைசி நேரத்தில் 5 வீரர்களின் பெயர்களை சேர்க்க, மொத்தமாக 351 வீரர்கள் இன்று ஏலம் விடப்பட உள்ளனர். 

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன், தென்னாப்பிரிக்காவின் ராஸி வாண்டர் டசன், ஆஸ்திரேலியாவின் ரிலே மெரெடித் மற்றும் இந்தியாவின் மயன்க் தாகர், பிரனவ் குப்தா ஆகிய 5 வீரர்களும் கடைசி நேரத்தில் ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால் மொத்தம் 351 வீரர்கள் ஏலத்தில் விடப்பட உள்ளனர். 

இவர்களில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனுக்கு அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பெங்களூருவில் வெளுத்து வாங்கிய மழை! ஆர்சிபி டாப், கொல்கத்தா வெளியேற்றம்!
போனால் போகட்டும்! வெளிநாட்டு பிளேயர்கள் குறித்து கூலாக பதில் சொன்ன IPL நிர்வாகம்