பாரிஸ் ஒலிம்பிக் தொடர் இன்னும் நாட்களில் தொடங்க உள்ள நிலையில் மகளிர் வாட்டர் போலோ அணியைச் சேர்ந்த 5 ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருக்கிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 117 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று 69 போட்டிகளில் 95 பதக்கங்களுக்காக போட்டி போடுகின்றனர். அதில், 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1900 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக பாரிஸில் ஒலிம்பிக் தொடர் நடைபெறுகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரிஸில் ஒலிம்பிக் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் உலகம் முழுவதிலுமிருந்து 10,714 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடுகின்றனர்.
undefined
இந்த நிலையில் தான், பாரிஸ் வந்த ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மகளிர் வாட்டர் போலோ டீமைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கொண்ட 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து ஆஸ்திரேலியாவின் செஃப் டி மிஷன் அன்னா மீரெஸ் கூறுகையில், கொரோனா பாதிப்பு வாட்டர் போலோ அணியில் மட்டுமே இருந்தன. எனினும், பாதிக்கப்பட்ட வீரர்கள் பயிற்சி செய்ய போதுமானதாக இருக்கும்போது பயிற்சி செய்வதற்கு தெளிவாக இருக்கிறார்கள் என்று கூறினார்.
மேலும், கொரோனா பாதிப்பு நெறிமுறைகளின் படி பாதிப்பு ஏற்பட்டவர்கள் முகத்தில் மாஸ்க் மற்றும் பயிற்சியிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ் சுதாரத்துறை அமைச்சர் ஃபிரடெரிக் வாலெடோக்ஸ் கூறியிருப்பதாவது, இங்கு கொரோனா பரவ தொடங்கியிருக்கிறது.
இப்பொழுது தான் பரவத் தொடங்கியிருக்கிறது. ஆனால், கடந்த 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஒப்பிடும் போது நாங்கள் வெகு தூரத்தில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.