டிராவில் முடிந்த 2ஆவது சுற்று போட்டி: டை பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் பலப்பரீட்சை!

By Rsiva kumar  |  First Published Aug 23, 2023, 6:20 PM IST

ஆர் பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையிலான உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2ஆவது சுற்று போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில், நாளை டை பிரேக்கர் சுற்று நடக்க இருக்கிறது.


அஜர்பைஜானில் உள்ள பாகு பகுதியில் உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடரானது 24ஆம் தேதி நாளை வரை நடக்கிறது. இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் உள்பட 206 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2 சுற்றுகளாக நடந்து வருகிறது. இதில், ஆர் பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Tap to resize

Latest Videos

இரண்டு சுற்றுகளாக நடத்தப்படும் இந்த இறுதிப் போட்டியின் முதல் சுற்றுப் போட்டியானது நேற்று நடந்தது. இதில், முதல் சுற்றுப் போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில், தற்போது 2ஆவது சுற்று போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இதில், பிரக்ஞானந்தா ஒயிட் காயினுடன் விளையாடினார். தற்போது வரையில் 16 மூவ் முடிந்துள்ள நிலையில், போட்டியானது டிராவை நோக்கி சென்றது. இருவரும் தங்களது ராணியை இழந்து விளையாடினர்.  இதில், மேக்னஸ் கார்ல்ஸ் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி வரும் நிலையில், பிரக்ஞானந்தா நிதானமாக விளையாடினர்.

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் ஃபைனல்: 2ஆம் கட்ட போட்டி தொடங்கியது: வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தப் போட்டியானது கடைசியில் டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நாளை நடக்க இருக்கிறது. இதில், வெற்றி பெறும் போட்டியாளருக்கு பரிசுத் தொகையாக 1,10,000 டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆவது இடம் பிடிக்கும் போட்டியாளருக்கு 80,000 டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பைக்கு தாயாரகும் டீம் இந்தியா; பெங்களூருக்கு வருகை தரும் சீனியர் வீரர்கள்!

 

Magnus Carlsen takes a quiet draw with white against Praggnanandhaa and sends the final to tiebreaks. The winner of the will be decided tomorrow!

📷 Maria Emelianova pic.twitter.com/aJw1vvoFnK

— International Chess Federation (@FIDE_chess)

 

click me!