
தமிழகத்தில் காரைக்குடியைச் சேர்ந்தவர் 15 வயதான செஸ் மாஸ்டர் பிரனேஷ். தனது 5 வயது முதல் செஸ்ட் போட்டியில் ஆர்வம் காட்டி விளையாடி வருகிறார். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல பட்டங்களையும் குவித்துள்ளார். காமன்வெல்த் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் பிரனேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் ரில்டன் கோப்பை சர்வதேச செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில், 9 போட்டிகளில் 8 புள்ளிகளை பெற்றுள்ளார்.
முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் அடித்த இலங்கை!
இதன் மூலமாக சர்வதேச மாஸ்டர் என்ற அந்தஸ்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்திற்கு உயர்வு பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் 28 ஆவது செஸ் வீரர் என்ற பெருமையை பிரனேஷ் பெற்றுள்ளார். இந்தியாவின் 79ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.