இது என்னங்க ரொம்ப அநியாயமா இருக்கு.. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மொக்கை பாயிண்ட் சிஸ்டம்.. கழுவி ஊற்றிய ஜாகீர் கான்

By karthikeyan VFirst Published Aug 9, 2019, 4:18 PM IST
Highlights

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். மொத்தமாக 27 டெஸ்ட் தொடர்கள் நடக்கவுள்ளன. இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. அதேபோலவே முதன்முறையாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. 

தற்போது நடந்துவரும் ஆஷஸ் தொடரின் முதல் போட்டிதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகளும் ஆடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி. 

அனைத்து அணிகளுமே 3 உள்நாட்டு மற்றும் 3 வெளிநாட்டு தொடர்களில் ஆடும். மொத்தமாக 27 டெஸ்ட் தொடர்கள் நடக்கவுள்ளன. இவற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இறுதி போட்டி நடக்கும். 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் பாயிண்ட்ஸ் சிஸ்டம் படுமோசமாக உள்ளது. ஒரு தொடருக்கு 120 புள்ளிகள். அது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தாலும் சரி, 2 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தாலும் சரி, ஆக மொத்தத்தில் ஒரு தொடருக்கு 120 புள்ளிகள். ஒவ்வொரு போட்டியின் வெற்றிக்கும் அந்த 120 புள்ளிகளிலிருந்து பிரித்து கொடுக்கப்படும்.

2 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் வென்றால், வெல்லும் அணிக்கு 60 புள்ளிகள். அதே 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் வென்றால், வெற்றி பெற்ற அணிக்கு வெறும் 24 புள்ளிகள் தான். இது மோசமான சிஸ்டம். ஏனெனில் ஆஷஸ் போன்ற கடும் நெருக்கடியான தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் ஆஸ்திரேலிய அணிக்கு வெறும் 24 புள்ளிகள் தான். அதே 2 போட்டிகள் கொண்ட தொடரில், சொந்த மண்ணில் மொக்கையான அணியை வீழ்த்தினால் கூட, அந்த ஜெயிக்கும் அணிக்கு 60 புள்ளிகள் வழங்கப்படும். இந்த மாதிரி பாயிண்ட்ஸ் கணக்கிடுவது மோசமான முறைதான். 

அதைத்தான் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகீர் கான், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அதன் பாயிண்ட்ஸ் சிஸ்டம் தான் வருத்தமளிக்கிறது. தற்போது இருக்கும் பாயிண்ட்ஸ் சிஸ்டமை சரிசெய்ய ஆழ்ந்து ஆராய்ந்து நிறைய பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஒரே மாதிரியான வெற்றிக்கு 60 மற்றும் 24 என வெவ்வேறு புள்ளிகளை வழங்குவது மோசமானது என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். 

ஜாகீர் கான் சொல்வது முழுக்க முழுக்க நூறு சதவிகிதம் சரியான விஷயம். 
 

click me!