IND vs NZ இந்திய அணி செய்தது செம மூவ்.. ஜாகீர் கான் பாராட்டு

By karthikeyan VFirst Published Nov 20, 2021, 5:31 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் சர்ப்ரைஸ் நகர்வு தன்னை வெகுவாக கவர்ந்ததாக ஜாகீர் கான் கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. இதையடுத்து இந்த தோல்வியை நினைத்து பெரிதாக கவலைப்படாமல், அடுத்த டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியில் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு தொடரிலேயே பரிசோதனைகளை தொடங்கிவிட்டது இந்திய அணி. மிடில் ஆர்டரில்/ஃபினிஷிங் ரோல் செய்யக்கூடிய, அதேவேளையில் பவுலிங்கும் வீசக்கூடிய  ஒரு ஆல்ரவுண்டருக்கான இடம் இந்திய அணியில் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா செய்துவந்த அந்த ரோலை செய்ய ஒரு தரமான வீரர் தேவை என்ற வகையில், வெங்கடேஷ் ஐயருக்கு நியூசிலாந்து தொடரில் அந்த ரோல் வழங்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் வெங்கடேஷ் ஐயர் பந்துவீசவில்லை. முதல் போட்டியில் கடைசி ஓவரில் களத்திற்கு வந்த நெருக்கடியான நிலையில், முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து 2வது பந்தில் ஆட்டமிழந்தார். 2வது டி20 போட்டியில், தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலுமே கிட்டத்தட்ட இலக்கிற்கு அருகில் அழைத்து சென்றனர். 14வது ஓவரில் தான் முதல் விக்கெட்டே(ராகுல்) விழுந்தது. இந்திய அணி 117 ரன்கள் அடித்திருந்த நிலையில் இலக்கை நெருங்கிய காரணத்தால் 3ம் வரிசையிலேயே இறக்கவிடப்பட்டார் வெங்கடேஷ் ஐயர்.

இந்நிலையில், வெங்கடேஷ் ஐயரை 3ம் வரிசையில் இறக்கிவிட்ட இந்திய அணியின் அந்த முடிவை வரவேற்றுள்ளார் ஜாகீர் கான். இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், வெங்கடேஷ் ஐயரை 3ம் வரிசையில் ப்ரமோட் செய்தது நல்ல நகர்வு. அடுத்த டி20 உலக கோப்பைக்கான தயாரிப்பை இந்திய அணி இப்போதே தொடங்கிவிட்டதை இது காட்டுகிறது. வெங்கடேஷ் ஐயரை ப்ரமோட் செய்த நகர்வு, எதிர்காலத்தை மனதில்வைத்து இந்திய அணி நிர்வாகம் எடுத்த சிறப்பான முடிவு என்று ஜாகீர் கான் கூறினார்.
 

click me!