IND vs NZ இவங்களுக்குலாம் எப்பதான் சான்ஸ் கிடைக்கும்..? ஆகாஷ் சோப்ரா கேள்வி

By karthikeyan VFirst Published Nov 20, 2021, 3:47 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி தேர்வு குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. இதையடுத்து இந்த தோல்வியை நினைத்து பெரிதாக கவலைப்படாமல், அடுத்த டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியில் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே, சிறந்த ஆடும் லெவனை செட் செய்ய மற்றும் பென்ச் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் இளம் வீரர்கள் இந்திய அணியில் எடுக்கப்பட்டனர். முதல் டி20 போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், முதல் 2 போட்டிகளிலும் ஆடினார். 2வது போட்டியில் ஹர்ஷல் படேல் அறிமுகமானார்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுஸ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு முதல் 2 போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணி முதல் 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டியிலாவது, ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, சாஹல், ஆவேஷ் கான், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் ஆகிய வீரர்களுக்கு 3வது டி20யில் இடம் கிடைக்குமா? இதற்கடுத்த டி20 தொடர் ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத்தான். இதிலிருந்து எத்தனை இளம் வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்? என்று ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பியுள்ளார்.
 

click me!