அந்த ஒரு விஷயத்தில் அஷ்வினை அடித்து காலி செய்து ஜடேஜா அணியில் இடம்பிடித்துவிட்டார்..! ஜாகீர் கான் அதிரடி

Published : Aug 08, 2021, 05:58 PM IST
அந்த ஒரு விஷயத்தில் அஷ்வினை அடித்து காலி செய்து ஜடேஜா அணியில் இடம்பிடித்துவிட்டார்..! ஜாகீர் கான் அதிரடி

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்பின்னராக அஷ்வின் சேர்க்கப்படாமல் ஜடேஜா சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஸ்பின்னராக அஷ்வின் எடுக்கப்படாமல் ஜடேஜா எடுக்கப்பட்டார். ஜடேஜா அஷ்வினை விட நன்றாக பேட்டிங் ஆடுவார் என்றாலும், ஸ்பின் பவுலிங்கை பொறுத்தமட்டில் அஷ்வின் டாப் ஸ்பின்னர்.

ஆனாலும் அஷ்வினை அணியில் எடுக்காமல் ஜடேஜாவிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அணியில் எடுக்கப்பட்டார். அஷ்வின் அணியில் எடுக்கப்படாதது பெரும் விவாதப்பொருளாக மாறியது.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் ஜாகீர் கான், ரவீந்திர ஜடேஜா அண்மைக்காலத்தில் பேட்டிங்கில் அடித்திருக்கும் ஸ்கோர், அவரை ஏன் அணியில் எடுத்தார்கள் என்பதை நமக்கு தெளிவுபடுத்தும். ஒரேயொரு ஸ்பின்னர் மட்டுமே அணியில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவை அணிய்ல் எடுத்ததற்கு அவரது அபாரமான பேட்டிங் திறமை தான் காரணம். இங்கிலாந்தில் ஸ்பின்னிற்கு பெரிதாக வேலை இருக்காது. முதல் இன்னிங்ஸில் ஜடேஜா வெறும் 3 ஓவர் தான் பவுலிங் வீசினார். ஆனால் பேட்டிங் நன்றாக ஆடினார் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் ஃபாஸ்ட் பவுலர்களே, இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரை வீழ்த்தும் வேலையை செய்துவிட்டனர். அதனால் ஜடேஜாவுக்கு பெரிதாக வேலையில்லை. ஆனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில், இக்கட்டான நேரத்தில் அருமையாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் ஜடேஜா.
 

PREV
click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!