#ENGvsIND முதல் டெஸ்ட்: இந்தியா ஜெயிக்க வேண்டிய போட்டியில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடும் மழை..!

Published : Aug 08, 2021, 05:07 PM IST
#ENGvsIND முதல் டெஸ்ட்: இந்தியா ஜெயிக்க வேண்டிய போட்டியில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடும் மழை..!

சுருக்கம்

இந்தியா ஜெயிக்க வேண்டிய இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை பாதித்துள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் அடிக்க, இந்திய அணி 278 ரன்கள் அடித்தது. 

95 ரன்கள்  பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, 303 ரன்கள் அடித்தது. எனவே 208 ரன்கள் முன்னிலை பெற்றதையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளில் இந்திய அணியின் வெற்றிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் கையில் 9 விக்கெட்டுகள் இருந்ததால் 157 ரன்களை இந்திய அணி எளிதாக அடிக்கும் சூழல் இருந்தது. ஆனால் இந்திய நேரப்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நின்று கடைசி 2 செசன்கள்  முழுவதும் ஆடினால் கூட, இந்திய அணி வெற்றி பெறலாம். அதற்கிடையிலும் மழை குறுக்கிட்டால், எளிதான வெற்றி வாய்ப்பை கொண்ட இந்திய அணிக்கு அது பாதிப்பாக அமையும்.
 

PREV
click me!

Recommended Stories

Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!
Abhishek Sharma: டெல்லிக்கு தண்ணி காட்டிய அபிஷேக் சர்மா.. 10 சிக்ஸர்களுடன் செஞ்சுரி..!