IPL 2023: தோனி மாதிரியே கேப்டன் கூல் சஞ்சு சாம்சன்..! சாஹல் புகழாரம்

By karthikeyan V  |  First Published Apr 23, 2023, 6:34 PM IST

ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன் தான் தனக்கு பிடித்த கேப்டன் என்றும், தோனி மாதிரியே சாம்சனும் கூலான கேப்டன் என்றும் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
 


சஞ்சு சாம்சன் மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதுதான் அவரது பெரிய பிரச்னையாக உள்ளது. அதனால் தான் இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

ஐபிஎல்லில் 148 போட்டிகளில் ஆடி 3683 ரன்களை குவித்துள்ள சஞ்சு சாம்சன், 11 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் ஆடி முறையே 330 மற்றும் 301 ரன்கள் அடித்துள்ளார். கிடைத்த வாய்ப்புகளில் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது விமர்சனத்துக்குள்ளாகிறது. 

Tap to resize

Latest Videos

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்டகாலமாக ஆடிவரும் சஞ்சு சாம்சன், அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவருகிறார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியை ஃபைனல் வரை அழைத்துச்சென்றார் சஞ்சு சாம்சன். ஃபைனலில் குஜராத்திடம் தோற்று கோப்பையை இழந்தது. 

IPL 2023: டுப்ளெசிஸ், மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்.. RCB பின்வரிசை வீரர்கள் சொதப்பல்..! RRக்கு சவாலான இலக்கு

இந்த சீசனிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபாரமாக ஆடிவருகிறது. முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சஞ்சு சாம்சன் ஆவேசமோ, அவசரமோ படாமல், இக்கட்டான சூழல்களில் கூட வீரர்கள் மீது அழுத்தம் போடாமல் நிதானமாக செயல்படுகிறார். அதைக்கண்ட பலரும் சாம்சன் தோனியை போன்ற கேப்டன் என்று புகழாரம் சூட்டுகின்றனர்.

அந்தவகையில், அவரது கேப்டன்சியில் ஆடிவரும் யுஸ்வேந்திர சாஹலும் சஞ்சு சாம்சனை தோனியுடன் ஒப்பிட்டதுடன், சசம்சன் தான் தனக்கு பிடித்தமான ஐபிஎல் கேப்டன் என்றும் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தோனி, ரோஹித், கோலி ஆகிய கேப்டன்களின் கீழ் ஆடியுள்ள சாஹல், ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக கோலியின் கேப்டன்சியில் நீண்டகாலம் ஆடினார். இப்போது சஞ்சு சாம்சனின் கேப்டன்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிவருகிறார்.

IPL 2023: கேகேஆரை எதிர்கொள்ளும் சிஎஸ்கே அணியில் அவங்க 2 பேரில் யாருக்கு இடம்..? CSK- KKR அணிகளின் உத்தேச லெவன்

இந்நிலையில், சஞ்சு சாம்சன் தான் தனக்கு பிடித்த ஐபிஎல் கேப்டன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல்லில் சஞ்சு சாம்சன் தான் எனக்கு பிடித்த கேப்டன். அவர் தோனியை போலவே மிகவும் அமைதியான, கூலான கேப்டன். கடந்த சீசனிலிருந்து எனது பவுலிங்கில் 10 சதவிகிதமாவது மேம்பட்டிருக்கிறது என்றால் அதற்கு சஞ்சு தான் காரணம். எனது 4 ஓவர்களை என் விருப்பப்படி வீச சுதந்திரம் கொடுக்கிறார் என்று சாஹல் தெரிவித்தார்.
 

click me!