சச்சின் டெண்டுல்கர் நாளை தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், குடும்பத்தோடு கோவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறார். சச்சினின் தந்தை ரமேஷ் மராத்தி மொழி நாவலாசிரியர் மற்றும் கவிஞர். தாய், ரஜினி இன்சூரன்ஸ் துறையில் பணிபுரிந்தார். சிறு வயது முதலே டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் பிறகு கவனம் முழுவதும் கிரிக்கெட் பக்கம் திசை திரும்ப இந்திய அணியில் இடம் பெற்று பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
IPL 2023: விராட் கோலியை விடாமல் துரத்தும் ஏப்ரல் 23 கோல்டன் டக்; கிரீன் ஜெர்சி ராசியா?
சர்வதேச கிரிக்கெட்டில் 34,000க்கும் அதிகமாக ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால், ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே சச்சின் விளையாடியுள்ளார். முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் அறிமுகமானார். கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி அறிமுகமான சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் 329 இன்னிங்ஸில் 15921 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 248 ரன்கள் சேர்த்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
எல்லோராலயும் விராட் கோலியாக முடியுமா? மும்பை இந்தியன்ஸ் வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்!
இதே போன்று 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். இதில், 463 போட்டிகளில் 452 இன்னிங்ஸ் விளையாடி 18426 ரன்கள் சேர்த்துள்ளார். 2012 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதுவரையில் சச்சின் அடித்த 100 சதங்கள் சாதனையை இதுவரையில் யாரும் முறியடிக்கவில்லை.
IPL 2023: மும்பை கோட்டையில் முதல் இந்திய வீரராக ரோகித் சர்மா 250 சிக்சர்கள் அடித்து சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்த சச்சின் 2013 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசியாக விளையாடினார். இதுவரையில் 78 போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 2334 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் நாளை தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவர் தனது மனைவி, மகள் ஆகியோருடன் இணைந்து கோவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் கோவா செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
நாளை தனது 50ஆவது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பிரம்மாண்டமாக கொண்டாட இருக்கிறார். நேற்று மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார்.