என்னோட 2வது இன்னிங்ஸுக்கான நேரம் வந்துருச்சு..! Yuvraj Singh-ன் டுவீட்டால் ரசிகர்கள் செம குஷி

Published : Dec 07, 2021, 05:44 PM IST
என்னோட 2வது இன்னிங்ஸுக்கான நேரம் வந்துருச்சு..! Yuvraj Singh-ன் டுவீட்டால் ரசிகர்கள் செம குஷி

சுருக்கம்

தனது 2வது இன்னிங்ஸுக்கான நேரம் வந்துவிட்டதாக யுவராஜ் சிங் டுவிட்டரில் பதிவிட்ட வீடியோ ரசிகர்களை செம குஷியாக்கியுள்ளது.  

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். 2000ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய யுவராஜ் சிங், 40 டெஸ்ட், 304 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய அணி வென்ற 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டிலும் முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். 

2011ல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றபோது யுவராஜ் சிங் தான் தொடர் நாயகன் விருதை வென்றார். அந்த தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்துவகையிலும், சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார் யுவராஜ் சிங்.

2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியில் ஆடிராத யுவராஜ் சிங், 2019ம் ஆண்டு ஓய்வு அறிவித்தார். இந்நிலையில், தனது 2வது இன்னிங்ஸுக்கான நேரம் வந்துவிட்டதாக அவர் டுவீட் செய்துள்ள வீடியோ செம வைரலாகிவருகிறது.

யுவராஜ் சிங் வீட்டில் பந்தை தட்டியபடி நடக்கிறார். பின்னணியில் அவர் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் விளாசியபோது, ரவி சாஸ்திரி வர்ணனை செய்யும் வாய்ஸ் ஓவர் வருகிறது. அந்த வீடியோவின் இடையே, 2வது இன்னிங்ஸுக்கான நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2வது இன்னிங்ஸுக்கான நேரம் வந்துவிட்டதாக யுவராஜ் சிங் பதிவிட்ட வீடியோ டுவீட், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. யுவராஜ் சிங்கை மீண்டும் களத்தில் காண ஏங்கிக்கொண்டிருக்கும் அவரது ரசிகர்களை யுவராஜ் சிங்கின் டுவீட் உற்சாகப்படுத்தியுள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!