India vs South Africa டெஸ்ட்: அவங்க 2 பேரை தூக்கிட்டு இந்த 11 பேரை இறக்குங்க.! வெற்றி இந்தியாவிற்கே

By karthikeyan VFirst Published Dec 7, 2021, 5:01 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன்.
 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் சற்று தாமதமாக டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்

2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்

3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.  இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு மிகச்சவாலாக இருக்கும்.

இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் ஃபார்மில் இல்லாமல் திணறிவரும் அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர், மயன்க் அகர்வால் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக ஆடியிருக்கின்றனர். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் ஹனுமா விஹாரி இருக்கிறார். எனவே யாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கிறது, யார் புறக்கணிக்கப்படப்போவது என்பது சுவாரஸ்யமாக இருக்கும். 

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஸ்டீவ் ஹார்மிசன்.

ரோஹித் சர்மாவுடன், நல்ல டச்சில் இருக்கும் மயன்க் அகர்வாலை தொடக்க வீரராக இறக்கிவிட்டு கேஎல் ராகுலை 3ம் வரிசையில் இறக்கலாம். 4ம் வரிசையில் கோலி, 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், 6ம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அதன்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, சிராஜ் மற்றும் பும்ராவை ஆடவைக்கலாம் என்று ஹார்மிசன் தெரிவித்துள்ளார்.

ஃபார்மில் இல்லாமல் பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் திணறிவரும் சீனியர் வீரர்கள் புஜாரா, ரஹானே ஆகிய இருவரையும் ஹார்மிசன் புறக்கணித்துள்ளார்.

ஸ்டீவ் ஹார்மிசன் தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!