தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணி..! ஆகாஷ் சோப்ராவின் அணியில் ரஹானே இல்லை

Published : Dec 07, 2021, 04:24 PM IST
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணி..! ஆகாஷ் சோப்ராவின் அணியில் ரஹானே இல்லை

சுருக்கம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.  

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 17ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் சற்று தாமதமாக டிசம்பர் 26ம் தேதி தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்: டிசம்பர் 26-30, செஞ்சூரியன்

2வது டெஸ்ட்: ஜனவரி 3-7, ஜோஹன்னஸ்பர்க்

3வது டெஸ்ட்: ஜனவரி 11-15, கேப்டவுன்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த அணியில், நியூசிலாந்துக்கு எதிராக அபாரமாக ஆடிய மயன்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரரான ஹனுமா விஹாரி இடம்பெற்றுள்ளார். அண்மைக்காலமாக ஃபார்மில் இல்லாமல் சொதப்பிவரும் சீனியர் வீரரான அஜிங்க்யா ரஹானேவை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்யவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆத்தாடி.. இவ்வளவா.. 'தல' தோனிக்கு ரூ.1,000 அபராதம்.. ஏன் தெரியுமா?
India vs England Semi Final: மிஸ்டரி ஸ்பின்னர் நீக்கம்.. அனுபவ வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன்!