தற்போதைய இந்திய அணியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடிக்க அவரால் மட்டுமே முடியும்..! யுவராஜ் சிங் அதிரடி

Published : Jul 01, 2021, 04:39 PM IST
தற்போதைய இந்திய அணியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடிக்க அவரால் மட்டுமே முடியும்..! யுவராஜ் சிங் அதிரடி

சுருக்கம்

தற்போதைய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவால் தான்  ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடிக்க முடியும் என்று ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்த யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.  

கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அது சர்வதேச போட்டியோ, உள்ளூர் போட்டியோ, கிளப் போட்டியோ எந்தவிதமான கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி, ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடிப்பது என்பது கடினமான காரியமே.

அந்தவகையில்,  சர் கார்ஃபீல்டு சோபர்ஸ்(1968), ரவி சாஸ்திரி(1985), ஹெர்ஷல் கிப்ஸ்(2007), யுவராஜ் சிங்(2007), ரோஸ் வைட்லி(2017), ஹஸ்ரதுல்லா சேசாய்(2018), லியோ கார்ட்டர்(2020), பொல்லார்டு(2021) மற்றும் திசாரா பெரேரா(2021) ஆகிய 9 வீரர்களும் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.

2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராடின் பவுலிங்கில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்ஸர்கள் அடித்ததை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ள யுவராஜ் சிங், தற்போதைய இந்திய அணியில் யாரால் அந்த சாதனையை படைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இப்போதைய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தான் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் விளாசவல்ல வீரர் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!