#ENGvsSL 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 01, 2021, 03:21 PM IST
#ENGvsSL 2வது ஒருநாள் போட்டி: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்திடம் இழந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது. ஆனால் அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்தை இன்று எதிர்கொள்கிறது இலங்கை அணி. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜோ ரூட், ஒயின் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, டாம் கரன், அடில் ரஷீத்.

உத்தேச இலங்கை அணி:

குசால் பெரேரா(கேப்டன், விக்கெட் கீப்பர்), நிசாங்கா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா, வஹிந்து ஹசரங்கா, தனஞ்செயா லக்‌ஷன், ரமேஷ் மெண்டிஸ், சாமிகா கருணரத்னே, பினுரா ஃபெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா.
 

PREV
click me!

Recommended Stories

Shubman Gill: விஜய் ஹசாரே டிராபியில் விளையாடும் சுப்மன் கில்.. எந்த டீம் தெரியுமா?
சுப்மன் கில் ஆடியே ஆகணும்.. அடம்பிடித்த கம்பீர், அகர்கர்.. தேர்வுக்குழுவில் எதிர்த்த 'அந்த' 2 பேர் யார்?