இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக தனது 11 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.
ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களும், இங்கிலாந்து 319 ரன்களும் எடுத்தன. பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் ரோகித் சர்மா 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சுப்மன் கில் 91 ரன்கள் சேர்த்து ரன் அவுட் செய்யப்பட்டார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்டு கர்ட் முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஆண்டர்சன் ஓவரில் மட்டும் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஜெய்ஸ்வால் 14 பவுண்டரி, 12 சிக்ஸர்கல் உள்பட 214 ரன்கள் குவித்து ஒரே சீரிஸில் இங்கிலாந்திற்கு எதிராக 2ஆவது முறையாக இரட்டை சதம் விளாசினார். இவ்வளவு ஏன், 90 பவுண்டரி, 25 சிக்ஸர்கள் மூலமாக 510 ரன்கள் குவித்துள்ளார். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் ஜெய்ஸ்வால் 861 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், ஜெய்ஸ்வால் குறித்து குறித்து கூறியுள்ளார். அதில் நான் எனது வாழ்வில் அடித்த ஒட்டு மொத்த சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்ஸில் அடித்துவிட்டார் என்று பெருமையாக கூறியுள்ளார்.அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்ஸர்கள் மட்டுமே விளாசியுள்ளார்.