கடந்த 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் மல்யுத்த வீரர்கள் கோரிக்கைகள் குறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர்.
ஐபிஎல்லில் வெற்றிகரமான டீம் எது? ஜாலியாக சண்டை போட்டுக் கொண்ட பொல்லார்டு, பிராவோ!
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ரன் அவுட்டால் சதத்தை கோட்டைவிட்ட சரித் அசலங்கா!
மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை தொடங்கினர்.
நன்றி சொல்றது ஈஸி, கஷ்டமானது அடுத்த சீசனுக்காக 9 மாசம் கடினமாக உழைக்கனும் – தோனி!
டெல்லி ஜந்தர் மந்திர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல் நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விராட் கோலி, புஜாராவை காலி செய்தால் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு – ரிக்கி பாண்டிங்!
இதில் ஒன்று தான், பிரிஜ் பூஷன் சிங்க் மீதான பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக சென்றனர். இதன் காரணமாக பேரணியாக சென்ற அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இது ஒரு புறம் இருக்க, இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தாவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று இந்திய மல்யுத்த சம்மேளனம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று டெல்லி போலீஸ் எச்சரித்துள்ளது.
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நடத்தும் போராட்டத்திற்கு 1983 உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை
இப்போ இவுங்களுக்கும் தேசதுரோகி பட்டம் கொடுக்கப்படுமா?
இந்த நிலையில், 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நடத்தும் போராட்டத்திற்கு 1983 உலகக் கோப்பை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
எங்களது சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டுள்ளனர். மல்யுத்த வீரர் வீராங்கனைகளுடைய கோரிக்கைகள் கேட்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Breaking:
எங்களது சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டுள்ளனர்.
மல்யுத்த வீரர் வீராங்கனைகளுடைய கோரிக்கைகள் கேட்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்: 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியினர் கூட்டாக அறிக்கை pic.twitter.com/wamMJueaJ1