WPL 2023: மும்பை இந்தியன்ஸுக்கு முதல் தோல்வியை பரிசளித்த யுபி வாரியர்ஸ்..!

By karthikeyan VFirst Published Mar 18, 2023, 7:20 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆடிய முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று தோல்வியே அடைந்திராத மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் யுபி வாரியர்ஸை எதிர்கொண்டது. மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், இசி வாங், ஹுமைரா காஸி, தாரா குஜார், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக். 

NZ vs SL: 2வது டெஸ்ட்டில் வில்லியம்சன், நிகோல்ஸ் இரட்டை சதம்..! மெகா ஸ்கோர் அடித்து நியூசிலாந்து டிக்ளேர்

யுபி வாரியர்ஸ் அணி:

அலைஸா ஹீலி (கேப்டன்), தேவிகா வைத்யா, கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, பார்ஷவி சோப்ரா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வர் கெய்க்வாட்.
 
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹைலி மேத்யூஸ் 30 பந்தில் 35 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 25 ரன்கள் அடித்தார். இசி வாங் அடித்து ஆடி 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்கள் அடிக்க, மற்ற வீராங்கனைகள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மும்பை இந்தியன்ஸ் அணி.

128 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் தேவிகா வைத்யா ஒரு ரன்னுக்கும், அலைஸா ஹீலி 8 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். டாலியா மெக்ராத் பொறுப்புடன் ஆடி 25 பந்தில் 38 ரன்களும், கிரேஸ் ஹாரிஸ் 28 பந்தில் 39 ரன்களும் அடிக்க, கடைசியில் தீப்தி ஷர்மா மற்றும் சோஃபி எக்லிஸ்டோன் ஆகிய இருவரும் இணைந்து இலக்கை அடித்து போட்டியை முடித்து கொடுத்தனர்.

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற யுபி வாரியர்ஸ் அணி, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு முதல் தோல்வியை பரிசளித்தது.
 

click me!