WPL 2023: மெக்ராத் அதிரடி அரைசதம்.. டெல்லி கேபிடள்ஸுக்கு ரெண்டுங்கெட்டான் இலக்கை நிர்ணயித்தது யுபி வாரியர்ஸ்

By karthikeyan VFirst Published Mar 21, 2023, 9:26 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக்கின் கடைசி லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 138 ரன்கள் அடித்து, 139 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறின.

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த நிலையில், மும்பை அணி ஆர்சிபியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்துவிட்டது. இந்நிலையில், கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் - யுபி வாரியர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் ஜெயித்தால் டெல்லி அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துவிடும்.  

விராட் கோலியே நேரில் வந்து கேட்டுகிட்டதால் தான் விண்ணப்பித்தேன்! ஆனால்..கோச் பதவி குறித்து மௌனம் கலைத்த சேவாக்

எனவே வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய டெல்லி கேபிடள்ஸ் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை  தேர்வு செய்தது. 

டெல்லி கேபிடள்ஸ் அணி: 

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, அலைஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெஸ் ஜோனாசென், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, பூனம் யாதவ். 

இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? வாசிம் அக்ரம் அதிரடி ஆருடம்

யுபி வாரியர்ஸ் அணி: 

ஷ்வேதா செராவத், அலைஸா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சோஃபி எக்லிஸ்டோன், சிம்ரன் ஷேக், பார்ஷவி சோப்ரா, அஞ்சலி சர்வானி, யாஷஸ்ரி, ஷப்னிம் இஸ்மாயில்.

முதலில் பேட்டிங் ஆடிய யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹைலீ மேத்யூஸ் 36 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ஷ்வேதா செராவத் 12 பந்தில் 19 ரன்கள் அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய டாலியா மெக்ராத் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 58 ரன்களை விளாசினார். மற்ற யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் 138 ரன்கள் அடித்த யுபி வாரியர்ஸ்  அணி, 139 ரன்கள் என்ற ரெண்டுங்கெட்டான் இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

click me!