WPL 2023: ஆர்சிபியை வீழ்த்தி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ்

By karthikeyan VFirst Published Mar 21, 2023, 7:04 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரைவிட்டு வெளியேறின. 

டெல்லி கேபிடள்ஸிடம் தோற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு பின் தங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, இன்றைய போட்டியில் ஆர்சிபியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? வாசிம் அக்ரம் அதிரடி ஆருடம்

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத்  கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹுஜா, ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா ஷோபனா, பிரீத்தி போஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனை டிவைன் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான ஸ்மிரிதி மந்தனா 24 ரன்கள் அடித்தார். படுமந்தமாக ஆடிய எலைஸ் பெர்ரி 38 பந்தில் 29 ரன்கள் மட்டுமே அடித்தார். ஹீதர் நைட் மற்றும் கனிகா ஆகிய இருவரும் தலா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 125 ரன்களையாவது அடித்தது ஆர்சிபி அணி.

விராட் கோலியே நேரில் வந்து கேட்டுகிட்டதால் தான் விண்ணப்பித்தேன்! ஆனால்..கோச் பதவி குறித்து மௌனம் கலைத்த சேவாக்

126 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹைலி மேத்யூஸ் மற்றும் யஸ்டிகா பாட்டியா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி 6 ஓவரில் 53 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஹைலி மேத்யூஸ் 24 ரன்களுக்கும் யஸ்டிகா பாட்டியா 30 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பவுலிங்கில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய அமெலியா கெர், பேட்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு 27 பந்தில் 31 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

17வது ஓவரில் இலக்கை அடித்து 4  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.
 

click me!