WPL 2023:அமெலியா கெர் அபாரமான பவுலிங்; குறைவான ஸ்கோருக்கு சுருண்டது ஆர்சிபி! எளிய இலக்கை விரட்டும் மும்பை அணி

Published : Mar 21, 2023, 05:33 PM IST
WPL 2023:அமெலியா கெர் அபாரமான பவுலிங்; குறைவான ஸ்கோருக்கு சுருண்டது ஆர்சிபி! எளிய இலக்கை விரட்டும் மும்பை அணி

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 125 ரன்கள் மட்டுமே அடித்த ஆர்சிபி அணி, 126 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ், யுபி வாரியர்ஸ் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

இன்று மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபிக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் ஜெயித்தால் நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புள்ளதால் மும்பை அணி வெற்றி வேட்கையில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? வாசிம் அக்ரம் அதிரடி ஆருடம்

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத்  கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹுஜா, ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா ஷோபனா, பிரீத்தி போஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீராங்கனை டிவைன் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான ஸ்மிரிதி மந்தனா 24 ரன்கள் அடித்தார். படுமந்தமாக ஆடிய எலைஸ் பெர்ரி 38 பந்தில் 29 ரன்கள் மட்டுமே அடித்தார். ஹீதர் நைட் மற்றும் கனிகா ஆகிய இருவரும் தலா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் இறங்கிய ரிச்சா கோஷ் அதிரடியாக ஆடி 13 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 29 ரன்கள் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 125 ரன்களையாவது அடித்தது ஆர்சிபி அணி.

சச்சின் டெண்டுல்கரின் 100 சத சாதனையை தகர்க்கணுமா? இதை மட்டும் செய்ங்க! விராட் கோலிக்கு அக்தர் கொடுக்கும் ஐடியா

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய அமெலியா கெர் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். வெறும் 126 ரன்கள் என்ற எளிய இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு