WPL 2023: கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அபார அரைசதம்.. யுபி வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

By karthikeyan V  |  First Published Mar 12, 2023, 11:05 PM IST

மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வாரியர்ஸுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று, முதல் சீசனில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. 
 


மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில்,  மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் யுபி வாரியர்ஸும் மும்பை இந்தியன்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

யுபி வாரியர்ஸ் அணி:

Tap to resize

Latest Videos

தேவிகா வைத்யா, அலைஸா ஹீலி (கேப்டன்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வர் கெய்க்வாட். 

ICC WTC: நியூசிலாந்தின் கையில் இந்திய அணியின் குடுமி..! மார்ச் 13 இந்திய அணிக்கு முக்கியமான தினம்

மும்பை இந்தியன்ஸ் அணி: 

யஸ்டிகா பாட்டியா, ஹைலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜார், அமெலியா கெர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமணி கலிதா, சாய்கா இஷாக்.
 
முதலில் பேட்டிங் ஆடிய யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 46 பந்தில் அலைஸா ஹீலி 58 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் டாலியா மெக்ராத் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய மெக்ராத் 37 பந்தில் 50 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது.

IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஹைலி மேத்யூஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, மற்றொரு தொடக்க வீராங்கனையான யஸ்டிகா பாட்டியா 42 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌரும் நாட் ஸ்கிவர் பிரண்ட்டும் இணைந்து ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுத்தனர். அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த  ஹர்மன்ப்ரீத் கௌர் 53 ரன்களும், ஸ்கிவர் பிரண்ட் 45 ரன்களும் அடிக்க மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனில் இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

click me!