WPL 2023: வலுவான டெல்லி கேபிடள்ஸை வீழ்த்தி 2வது வெற்றியை பெற்றது குஜராத் ஜெயிண்ட்ஸ்

By karthikeyan VFirst Published Mar 16, 2023, 11:07 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடள்ஸை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் 2வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி. 
 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வலுவான டெல்லி கேபிடள்ஸும், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, அலைஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ்.

IND vs AUS: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் தரமான தேர்வு

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சோஃபியா டன்க்லி, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, ஸ்னே ராணா (கேப்டன்), சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), கிம் கர்த், டனுஜா கன்வார், மன்ஸி ஜோஷி, அஷ்வனி குமாரி.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை சோஃபியா 4 ரன்னில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். வோல்வார்ட் 45 பந்தில் 57 ரன்கள் அடித்தார். அவருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் ஆடிய ஹர்லீன் தியோல் 31 ரன்கள் அடித்தார்.

4ம் வரிசையில் இறங்கிய ஆஷ்லே கார்ட்னெர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். 33 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்களை கார்ட்னெர் குவிக்க, 20 ஓவரில் 147 ரன்கள் அடித்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி.

148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் மேரிஸன் கேப் தான் அதிகபட்சமாக 36 ரன்கள் அடித்தார். கேப்டன் மெக் லானிங் 18 ரன்களுக்கும், ஷஃபாலி வெர்மா 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்ஸி 11 பந்தில் 22 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் அருந்ததி ரெட்டி 17 பந்தில் 25 ரன்கள் அடித்து போராடினார். அவரும் 18வது ஓவரில் ஆட்டமிழக்க, 18.4 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது டெல்லி அணி.

பீஸ்ட் மோடில் உள்ள விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? ஷோயப் அக்தரின் முரட்டு கணிப்பு

11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியது.
 

click me!