WPL 2023: ஆஷ்லே கார்ட்னெர், லாரா அரைசதம் அடித்தும் குஜராத் ஜெயிண்ட்ஸ் குறைவான ஸ்கோர்.! டெல்லிக்கு எளிய இலக்கு

Published : Mar 16, 2023, 09:12 PM IST
WPL 2023: ஆஷ்லே கார்ட்னெர், லாரா அரைசதம் அடித்தும் குஜராத் ஜெயிண்ட்ஸ் குறைவான ஸ்கோர்.! டெல்லிக்கு எளிய இலக்கு

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் 20 ஓவரில் 147 ரன்கள் அடித்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, 148 ரன்கள் என்ற இலக்கை டெல்லி அணிக்கு நிர்ணயித்துள்ளது.   

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள டெல்லி கேபிடள்ஸும், ஒரேயொரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸும் இன்று ஆடிவருகின்றன.

பலமான டெல்லி கேபிடள்ஸும் பலவீனமான குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, அலைஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ்.

IND vs AUS: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் தரமான தேர்வு

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சோஃபியா டன்க்லி, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, ஸ்னே ராணா (கேப்டன்), சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), கிம் கர்த், டனுஜா கன்வார், மன்ஸி ஜோஷி, அஷ்வனி குமாரி.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை சோஃபியா 4 ரன்னில் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். வோல்வார்ட் 45 பந்தில் 57 ரன்கள் அடித்தார். அவருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் ஆடிய ஹர்லீன் தியோல் 31 ரன்கள் அடித்தார்.

பீஸ்ட் மோடில் உள்ள விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? ஷோயப் அக்தரின் முரட்டு கணிப்பு

4ம் வரிசையில் இறங்கிய ஆஷ்லே கார்ட்னெர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். 33 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்களை கார்ட்னெர் குவிக்க, 20 ஓவரில் 147 ரன்கள் அடித்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி, 148 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு இது எளிதாக அடிக்கக்கூடிய இலக்கே ஆகும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: தமிழக வீரர் மின்னல் வேக சதம். அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா
T20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் முடிவால் ரூ.2,200 கோடி இழப்பு.. தவிக்கும் ஐசிசி.. அடுத்து என்ன நடக்கும்?