IND vs AUS: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் தரமான தேர்வு

Published : Mar 16, 2023, 08:27 PM IST
IND vs AUS: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! வாசிம் ஜாஃபரின் தரமான தேர்வு

சுருக்கம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை மும்பையில் நடக்கிறது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற நிலையில், அடுத்ததாக ஒருநாள் தொடர் நடக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை(17), மார்ச் 19, 22 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடப்பதால் அதற்கான நல்ல தயாரிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு இந்த தொடர் அமையும்.

பீஸ்ட் மோடில் உள்ள விராட் கோலி எத்தனை சதங்கள் அடிப்பார்..? ஷோயப் அக்தரின் முரட்டு கணிப்பு

நாளை மும்பையில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணிக்கான ஆடும் லெவனை வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் சர்மா ஆடவில்லை. ரோஹித் ஆடாததால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்கிறார். 

ரோஹித் ஆடாததால் ஷுப்மன் கில் - இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். அதைத்தான் வாசிம் ஜாஃபரும் தெரிவித்துள்ளார். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் கேஎல் ராகுல் ஆகியோர் ஆடுவார்கள். கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா 6ம் வரிசையில் ஆடுவார்.

ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரையும், மற்றுமொரு ஸ்பின்னராக குல்தீப் யாதவை தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாஃபர். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி மற்றும் சிராஜை தேர்வு செய்துள்ளார். கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஃபாஸ்ட் பவுலிங் வீசுவார்.

சச்சின் பயங்கரமான மூளைக்காரர்.. அவரை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கே எதிராக திரும்பியது.! சக்லைன் முஷ்டாக் வருத்தம்

வாசிம் ஜாஃபர் தேர்வு செய்து முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:

ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!