மகளிர் டி20 உலக கோப்பை: இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

Published : Feb 11, 2023, 08:38 PM IST
மகளிர் டி20 உலக கோப்பை: இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 135 ரன்கள் அடித்து, 136 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. க்ரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் உள்ளன. க்ரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
 
நேற்று நடந்த முதல் போட்டியில் க்ரூப் 1ல் இடம்பெற்ற தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் நங்கூரம் போட்ட இந்தியா..! ஆஸி.,க்கு சரிவு

இன்று நடந்துவரும் போட்டியில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி:

ஹைலி மேத்யூஸ் (கேப்டன்), ரஷாடா வில்லியம்ஸ் (விக்கெட் கீப்பர்), ஷெமைன் கேம்ப்பெல், ஸ்டாஃபைன் டெய்லர், ஷாபிகா காஜ்நபி, சின்னிலி ஹென்ரி, செடீன் நேஷன், ஸைடா ஜேம்ஸ், அஃபி ஃப்ளெட்சர், ஷாமிலியா கானெல், ஷகீரா செல்மான்.

இங்கிலாந்து மகளிர் அணி:

சோஃபியா டன்க்லி, டேனியெலி வியாட், அலைஸ் கேப்ஸி, நாடலி ஸ்கைவெர், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), சோஃபி எக்லிஸ்டோன், கேத்ரின் ப்ரண்ட், சார்லோடி டீன், சாரா க்ளென், லாரன் பெல்.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான ஹைலி மேத்யூஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 32 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய கேம்ப்பெல்லி 37 பந்தில் 34 ரன்கள் அடித்தார். இவர்கள் இருவரைத்தவிர வேறு யாரும் சரியாக ஆடவில்லை. அதனால் அந்த அணியால் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

  நீங்க பண்ணது தப்பு.. விதி மீறிய ஜடேஜா மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

ஆனாலும் 136 ரன்கள் என்பது சவாலான இலக்குதான். இந்த இலக்கை இங்கிலாந்து அணி விரட்டிவருகிறது.  
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!