
மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் ஏ-வில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய மகளிர் அணி:
அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், மேகன் ஸ்கட், டார்ஸி பிரௌன்.
இலங்கை மகளிர் அணி:
ஹர்ஷிதா சமரவிக்ரமா, சமரி அத்தப்பத்து (கேப்டன்), விஷ்மி குணரத்னே, அனுஷ்கா சஞ்சீவனி (விக்கெட் கீப்பர்), நிலக்ஷி டி சில்வா, மல்ஷா ஷெஹானி, ஒஷாஃபி ரணசிங்கே, அமா காஞ்சனா, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீரா, அச்சினி குலசூரியா.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனை மாதவி 34 ரன்கள் அடித்தார். இதுதான் அந்த அணி வீராங்கனைகள் அடித்ததில் அதிகபட்ச ஸ்கோர். ஆனால் அவர் இதை அடிக்க 40 பந்துகள் எடுத்துக்கொண்டார். கேப்டனும் மற்றொரு தொடக்க வீராங்கனையுமான அத்தப்பத்து 16 ரன்கள் மட்டுமே அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய விஷ்மி குணரத்னே 24 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே இந்த ஸ்கோர் கூட அடிக்காமல் ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் இலங்கை அணி வெறும் 112 ரன்கள் மட்டுமே அடித்தது.
100வது டெஸ்ட்டில் ஆடும் புஜாரா..! 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் பட்டியல்
113 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் அலைஸா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இருவரும் அரைசதம் அடித்து, அவர்களே இலக்கை அடித்து ஆட்டத்தை முடித்துவிட்டனர். 16வது ஓவரில் இலக்கை அடித்து ஆஸ்திரேலிய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.