
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் முதல் போட்டியில் பெஷாவர் ஸால்மியிடம் தோல்வியை தழுவிய கராச்சி கிங்ஸ் அணி, இன்றைய போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு இந்த சீசனின் முதல் போட்டியில் இன்று ஆடுகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது இஸ்லாமாபாத் யுனைடெட் அணி. முதல் போட்டியில் தோற்ற கராச்சி கிங்ஸும் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
100வது டெஸ்ட்டில் ஆடும் புஜாரா..! 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இந்திய வீரர்கள் பட்டியல்
இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியிருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும். கராச்சியில் நடக்கும் இந்த போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:
ஹசன் நவாஸ், பால் ஸ்டர்லிங், காலின் முன்ரோ, ராசி வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், முகமது வாசிம், ருமான் ரயீஸ்.
IND vs AUS: 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்
கராச்சி கிங்ஸ் அணி:
ஜேம்ஸ் வின்ஸ், ஷர்ஜீல் கான், ஹைதர் அலி, ஷோயப் மாலிக், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம் (கேப்டன்), இர்ஃபான் கான், ஜேம்ஸ் ஃபுல்லர், ஆண்ட்ரூ டை, முகமது அமீர், முகமது மூசா.