ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறாத நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் கட்டமாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டொமினிகாவில் உள்ள ரோசோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இன்னிங்ஸ், 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!
இதில், யஷஸ்வி ஜெஸ்ய்வால் தனது அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் 171 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். விராட் கோலி 76 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, 271 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. ஆனால், சொல்லிக்கொள்ளும் படி வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த வீரரும் நிலைத்து நிற்கவில்லை. ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அலிஸ் அதனாஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 20 ரன்கள் சேர்த்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அட்டவணை வெளியீடு!
பந்து வீச்சு தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் மற்றும் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து ரவிச்சந்திரன் அஸ்வின் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தன்னை எடுக்காததை சொல்லாமல் சொல்லிக் காட்டி சாதனை படைத்துள்ளார்.
அடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு நடக்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஃபீல்டர்களாக வலம் வந்த கிரிக்கெட் வீரர்கள்!