வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் கட்டமாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டொமினிகாவில் உள்ள ரோசோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அட்டவணை வெளியீடு!
அதன் பிறகு இந்தியா தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்தப் போட்டியின் மூலமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இதில், கேப்டன் ரோகித் சர்மா தனது 10ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தப்பு கணக்கு போட்ட ராகுல் டிராவிட்: சுப்மன் கில் நம்பர் 3க்கு செட்டாவாரா?
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3500 ரன்களுக்கும் மேல் குவித்தார். அதன் பிறகு வந்த சுப்மன் கில் 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து வந்த விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் களமிறங்கி விளையாடினார். 2ஆவது நாள் முடிவில் ஜெய்ஸ்வால் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து பல சாதனைகளை படைத்தார். அவர் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அப்போது இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஃபீல்டர்களாக வலம் வந்த கிரிக்கெட் வீரர்கள்!
அதன் பிறகு 3ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில் கூடுதலாக 7 ரன்கள் சேர்த்த நிலையில், அறிமுக டெஸ்ட்டில் 150 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 வயது 196 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன் பிறகு 20 ரன்கள் சேர்த்து மொத்தமாக 171 ரன்களாக இருந்த போது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3ஆவது இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக ஷிகர் தவான் 187 ரன்களுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 177 ரன்களுடன் 2ஆவது இடத்திலும் உள்ளனர். 4ஆவது இடத்தில் குண்டப்பா விஸ்வநாத் 137 ரன்களுடனும், பிரித்வி ஷா 134 ரன்களுடனும் அடுத்தடுத்த இடத்தில் இருந்தனர்.
அதிக பந்துகள் பிடித்த இந்திய வீரர்:
அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகள் பிடித்தவர்களின்பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். அவர் 387 பந்துகள் பிடித்து 171 ரன்கள் குவித்தார். தொடக்க வீரராக அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலிலும் ஜெய்ஸ்வால் இடம் பெற்றார். அவே போட்டியில் முதல் இந்தியராக ஜெய்ஸ்வால் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஒரு புறம் விராட் கோலி தனது 29ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்து, அவர் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 3 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ரவீந்திர ஜடேஜா மற்றும் இஷான் கிஷான் இருவரும் விளையாடினர். இதில், ஜடேஜா 37 ரன்கள் மற்றூம் கிஷான் ஒரு ரன்கள் இருந்த போது ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.
இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக 271 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 271 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. ஆனால், சொல்லிக்கொள்ளும் படி வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்தவீரரும் நிலைத்து நிற்கவில்லை. ஒவ்வொருவரு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அலிஸ் அதனாஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 20 ரன்கள் சேர்த்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
80 பந்துகளுக்கு பிறகு முதல் பவுண்டரி அடித்து கொண்டாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!
பந்து வீச்சு தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் மற்றும் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து ரவிச்சந்திரன் அஸ்வின் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.