இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அட்டவணை வெளியீடு!

By Rsiva kumar  |  First Published Jul 14, 2023, 7:46 PM IST

வரும் டிசம்பர் மாதம் இந்தியாவின், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை தென் ஆப்பிரிக்கா மற்றும் பிசிசிஐ உறுது செய்தன.


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இந்தியா, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதன் பிறகு ஆசிய கோப்பை 2023 மற்றும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. அதன் பிறகு ஆஸ்திரேலியா டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

தப்பு கணக்கு போட்ட ராகுல் டிராவிட்: சுப்மன் கில் நம்பர் 3க்கு செட்டாவாரா?

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் வரும் டிசம்பர் மாதம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் செஞ்சூரியனில் பாக்‌ஷிங் டே டெஸ்ட் போட்டி மற்றும் கேப்டவுனில் நியூ இயர் டெஸ்ட் உள்பட 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும். இந்த டி20 போட்டியானது, டர்பன், குகெபர்ஹா மற்றும் ஜோகன்னஸ்பர்க் ஆகிய பகுதிகளில் நடக்கிறது. முதல் 2 போட்டியானது குகெபர்ஹா மற்றும் ஜோகன்னஸ்பர்க் ஆகிய பகுதிகளிலும் 3ஆவது டி20 போட்டியானது பார்ல் பகுதியிலும் நடக்கிறது.

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஃபீல்டர்களாக வலம் வந்த கிரிக்கெட் வீரர்கள்!

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியமான, இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ரசிகர்கள், தென் ஆப்பிரிக்கா வருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிற்து என்று கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தலைவர் லாசன் நைடூ தெரிவித்துள்ளார். மேலும், இரு அணிகளுக்கும் இது ஒரு முக்கியமான சுற்றுப்பயணம். இதில், நாங்களும் இருக்கிறோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சுற்றுப்பயணமானது, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டை நாடு முழுவதும் கொண்டு செல்லும். பிசிசிஐ உடன் சிறந்த உறவை பகிர்ந்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

முதல் போட்டியிலேயே வெற்றி வாகை சூடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

இதையடுத்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியிருப்பதாவது: இரு அணிகளுக்கு இடையிலான இந்த சுதந்திர தொடரானது, இரு டெஸ்ட் அணிகளை கொண்டிருப்பதால் மட்டுமின்றி அந்தந்த நாடுகளையும், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் வடிவமைத்த 2 சிறந்த தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரை கௌரவிக்கும் வகையில் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.

"பாக்சிங் டே டெஸ்ட் மற்றும் நியூ இயர் டெஸ்ட் ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமான போட்டிகள். மேலும், அட்டவணை குறிப்பாக இந்த மார்க்யூ தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்தியா எப்போதும் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.

80 பந்துகளுக்கு பிறகு முதல் பவுண்டரி அடித்து கொண்டாடிய விராட் கோலி; வைரலாகும் வீடியோ!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்:

டி20 தொடர்:

டிசம்பர் 10 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் டி20 - டர்பன்

டிசம்பர் 12 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது டி20 - குகெபர்ஹா

டிசம்பர் 14 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 3 ஆவது டி20 – ஜோகன்னஸ்பர்க்

ஒரு நாள் கிரிக்கெட் தொடர்:

டிசம்பர் 17 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் ஒரு நாள் கிரிக்கெட் – ஜோகன்னஸ்பர்க்

டிசம்பர் 19 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் – குகெபர்ஹா

டிசம்பர் 21 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் – பார்ல்

டெஸ்ட் தொடர்:

டிசம்பர் 26 – டிசம்பர் 30 – இந்தியா – தென் ஆப்பிரிக்கா – முதல் டெஸ்ட், செஞ்சூரியன்

ஜனவரி 03 – ஜனவரி 07 - இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2ஆவது டெஸ்ட், கேப்டவுன்

click me!