இந்திய அணியிலிருந்து ஏன் எதற்கு நீக்கப்பட்டேன் என்ற காரணமே தெரியவில்லை என்று இளம் வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இடம் பெற்று விளையாடி வந்தவர் இளம் வீரர் பிரித்வி ஷா. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் கூட மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய நிலையில், அணியில் உட்கார வைக்கப்பட்டார்.
பிரையன் லாராவை மாற்றும் முயற்சியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அதிரடி முடிவு எடுக்கும் காவ்யா மாறன்!
இந்திய அணியில் இடம் பெற்றதிலிருந்து தற்போது வரையில் 5 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு உடல் தகுதி தான் காரணம் என்று கூறினார்கள். ஆனால், தேசிய கிரிக்கெட் அகாடமியில் எனது உடல் தகுதியை நான் நிரூபித்தேன். அதன் பிறகு விளையாடி ரன்கள் சேர்த்தேன். ஆதலால் டி20 அணியில் இடம் கிடைத்தது. ஆனால், பிளேயிங் 11ல் இடம் கிடைக்கவிலை. நான் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் இதுவரையில் எனக்கு தெரியவில்லை.
என்னைப் பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், நான் யார் என்று எனக்கு தெரியும். எனது தனி உலகத்தில் இருக்கவே நான் விரும்புகிறேன். எனினும், எனக்கு நண்பர்கள் அதிகம் கிடையாது. இன்றைய தலைமுறையினருக்கு இது தான் பெரிய பிரச்சனை. எனக்கு இருப்பதோ 2 நண்பர்கள் தான். அவர்களிடமும் நான் எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது. கவுண்டில் கிரிக்கெட்டில் அழைப்பு வந்துள்ள எனக்கு, நான் அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பதாக பிரித்வி ஷா கூறினார்.
சாப்பாடு நல்லா இருக்காதா? டார்க் சாக்லேட் வாங்கிய இஷான் கிஷான்: வைரலாகும் வீடியோ!