சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரான பிரையன் லாராவை மாற்ற அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 10ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதன் மூலமாக தொடர்ந்து 3ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.
ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட ஒரு ஆண்டிற்குள்ளாக அவரை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருக்குப் பதிலாக ஆண்டி பிளவரை நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாப்பாடு நல்லா இருக்காதா? டார்க் சாக்லேட் வாங்கிய இஷான் கிஷான்: வைரலாகும் வீடியோ!
இதற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆண்டி பிளவரின் ஒப்பந்தம் முடிந்த நிலையில், அவருக்குப் பதிலாக லக்னோ அணி ஜஸ்டின் லங்கரை ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான டாம் மூடிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக பிரையன் லாரா நியமிக்கப்பட்டார்.
பிரமாண்டமாக தொடங்கும் மகளிருக்கான ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு!
ஆனால், அதுவும் ஒரு ஆண்டு ஆன நிலையில், அவருக்குப் பதிலாக புதிய பயிற்சியாளரான ஆண்டி பிளவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பயிற்சியாளராக உள்ள ஏட்ரியன் பைரல் கூட நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இறுதி முடிவு என்னவோ அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் கையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.