யாருக்கு வாய்ப்பு அதிகம்? பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணி எது?

By Rsiva kumar  |  First Published May 15, 2023, 4:03 PM IST

இதுவரையில் எந்த அணியும் ஐபிஎல் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில், இனி வரும் போட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு அணிக்கும் பிளே ஆஃப் சாதகமாக இருக்குமா என்பது குறித்து பார்க்கலாம்.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புக்காக போராடி வருகின்றன. ஆனால், இதில் முதல் அணியாக டெல்லி கேபிடல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பு இழந்து தொடரிலிருந்து வெளியேறியது. எனினும், இன்னும் 2 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

நேற்று நடந்த 2 போட்டிகளில் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்தது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், 2ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வெற்றி பெற்றன. கொல்கத்தா அணிக்கு இன்னமும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. ஆர்சிபி அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், ராஜஸ்தான் ராயலஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு என்பது சந்தேகம் தான்.

Tap to resize

Latest Videos

டாஸ் ஜெயிச்சு பேட்டிங் எடுத்தது தான் தவறு: தோல்விக்கு முழு பொற்றுப்பேற்ற தோனி!

கிட்டத்தட்ட ஒவ்வொரு அணியும் 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் இன்னும் ஓரிரு போட்டிகள் எஞ்சிய நிலையில், எந்த அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக இனி வரும் போட்டிகள் ஒவ்வொரு அணிக்கும் வாழ்வா, சாவா போட்டியாக அமைந்துள்ளது.  

சுனில் கவாஸ்கர் சட்டையில் ஆட்டோகிராஃப் போட்ட தோனி!

குஜராத் டைட்டன்ஸ்:

ஹர்திக் பாண்டியா தலைமையிலா குஜராத் அணிக்கு 2 போட்டிகள் உள்ள நிலையில், ஒன்றில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும். இன்று நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

இன்று நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தால் அவ்வளவு தான். பிளே ஆஃப் கனவு கலைந்துவிடும். இன்னும் 3 போட்டிகள் உள்ள நிலையில், மூன்றிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு.

சென்னையில் நடந்த கடைசி லீக்; தோற்றாலும் கம்பீரம் குறையாமல் ரசிகர்களை அன்பில் ஆழ்த்திய தோனி அண்ட் டீம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதீராக நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பு அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஆர்சிபிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. பஞ்சாப் மற்றும் ஆர்சிபிக்கு 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு கலைந்துவிடும்.

CSKஐவிட RCBக்காக முதல் வீரராக 600 ரன்கள் குவித்த ஃபாப் டூப்ளெசிஸ்!

மும்பை இந்தியன்ஸ்:

தற்போது 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மும்பையின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

லக்னோ அணி 12 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது. இதில், இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் உறுதி செய்யப்படும். மாறாக ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு சந்தேகம் தான்.

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மார்க்‌ஷீட்டை வெளியிட்ட ஷஃபாலி வர்மா!

click me!