IPL Auction 2024: ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார்?

By Rsiva kumar  |  First Published Dec 20, 2023, 2:49 PM IST

துபாயில் நடந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார் அதிகபட்சமாக ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.


துபாயில் நடந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்த வீரர் ஆனார். கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 20.50 கோடி கொடுத்து வாங்கியது. சிறிது நேரத்தில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுவிட்டது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.24.75 கோடிக்கு விற்கப்பட்டதன் மூலம் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

IPL Auction:ரஜினி சொன்ன நல்ல பிளேயர்ஸ எடுத்தாரா காவ்யா மாறன் – ஐபிஎல்லில் அவருடைய ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்?

Tap to resize

Latest Videos

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டார். இவர்களைத் தவிர வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசஃப் ரூ.11.50 கோடிக்கு ஏலம் வாங்கப்பட்டார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேல் கடந்த சீசன் வரையில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வந்த நிலையில், அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரை, தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.75 கோடிக்கு வாங்கியது.

பதிலுக்கு பதில் புரட்டி எடுத்த தென் ஆப்பிரிக்கா, ஒய் பிளட், சேம் பிளட் கத மாதிரி அடி வாங்கிய ராகுல் அண்ட் டீம்

இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், டேரில் மிட்செல், ஹர்ஷல் படேல், அல்சாரி ஜோசஃப் ஆகியோர் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில், இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வரும் நிலையில், 16 ஆண்டுகளாக ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…

ஏலம் முடிஞ்சிருச்சு…நம்ம சிஎஸ்கேல ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் யார் யார்? மீதி பர்ஸ் தொகை, Available Slot?

ஐபிஎல் வரலாற்றில் விலை உயர்ந்த வீரர்:

வீரர்கள் அணி தொகை  வருடம்
மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  ரூ.24.75 கோடி 2024
பேட் கம்மின்ஸ்  சனரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.20.50 கோடி 2024
சாம் கரண் பஞ்சாப் கிங்ஸ் ரூ.18.50 கோடி 2023
கேமரூன் க்ரீன் மும்பை இந்தியன்ஸ் ரூ.17.50 கோடி 2023
பென் ஸ்டோக்ஸ்  சென்னை சூப்பர் கிங்ஸ்  ரூ.16.25 கோடி 2023
கிறிஸ் மோரீஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்  ரூ.16.25 கோடி 2021
யுவராஜ் சிங் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ.16 கோடி 2015
நிக்கோலஸ் பூரன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ரூ.16 கோடி 2023
பேட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.15.50 கோடி 2020
இஷான் கிஷான் மும்பை இந்தியன்ஸ் ரூ.15.25 கோடி 2022

ஐபிஎல்லில் ஆண்டு வாரியாக அதிக விலை கொண்ட வீரர்கள்:

IPL 2024 Player Auction: குமார் குஷாக்ரா முதல் மிட்செல் ஸ்டார்க் வரை அதிக தொகைக்கு வாங்கப்பட்ட டாப் பிளேயர்ஸ்!

வருடம் வீரர்கள் அணிகள் தொகை
2008 எம்.எஸ்.தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.5 கோடி
2009 கெவின் பீட்டர்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.9.8 கோடி
2009 ஆண்ட்ரூ பிளிண்டாப் சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.8 கோடி
2010 ஷேன் பாண்ட்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.4.8 கோடி
2010 கெரான் போலார்டு மும்பை இந்தியன்ஸ் ரூ.4.8 கோடி
2011 கவுதம் காம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.14.9 கோடி
2012 ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.12.8 கோடி
2013  கிளென் மேக்ஸ்வெல் மும்பை இந்தியன்ஸ் ரூ.6.3 கோடி
2014 யுவராஜ் சிங் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ரூ.14 கோடி
2015 யுவராஜ் சிங் டெல்லி டேர்டெவில்ஸ் ரூ.16 கோடி
2016 ஷேன் வாட்சன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ரூ.9.5 கோடி
2017 பென் ஸ்டோக்ஸ் ரைசிங் புனே ஜெயிண்ட்ஸ் ரூ.14.5 கோடி
2018 பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.12.5 கோடி
2019 ஜெயதேவ் உனத்கட் பஞ்சாப் கிங்ஸ் ரூ.8.4 கோடி
2019 வருண் சக்கரவர்த்தி பஞ்சாப் கிங்ஸ் ரூ.8.4 கோடி
2020 பேட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.15.5 கோடி
2021 கிறிஸ் மோரீஸ்  ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.16.25 கோடி
2022 இஷான் கிஷான் மும்பை இந்தியன்ஸ் ரூ.15.25 கோடி
2023 சாம் கரண்  பஞ்சாப் கிங்ஸ் ரூ.18.5 கொடி
2024 மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.24.75 கோடி

IPL 2024 Player Auction: தமிழக வீரர் ஷாருக் கானை ரூ.7.40 கோடிக்கு வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்!

இது ஐபிஎல் வரலாற்றிலும் 2024 சீசனிலும் அதிக விலை கொண்ட வீரர்களின் பட்டியல். வெளிநாட்டு வீரர்கள், குறிப்பாக ஆல்-ரவுண்டர்கள் மற்றும் ஹெவி ஹிட்டர்கள் அதிக ஏல விலைகளைப் பெறுவது அறியப்படுகிறது. இருப்பினும், இந்திய வீரர்கள் அதிகம் பின்தங்கவில்லை. ஃபினிஷிங் பவர், ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு பெயர் போன யுவராஜ் சிங், 2014 ஆம் ஆண்டிலேயே அதிக விலையைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் சீசனில் எம்எஸ் தோனிதான் அதிக விலை கொண்ட வீரர். பல வளர்ந்து வரும் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் பின்னணியில் இருந்தும் அதிக விலைக்கு வாங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!