இந்தியாவுடன் மோதும் அந்த ஒரு அணி எது? நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் - யாருக்கு அந்த வாய்ப்பு!

By Rsiva kumar  |  First Published Nov 8, 2023, 5:27 PM IST

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கான கடைசி இடத்திற்கு நியூசிலாது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் போட்டி போடுகின்றன.


இந்தியாவில் நடக்கும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்கை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். முதல் 3 இடங்களுக்கான பட்டியலில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இதையடுத்து 4 ஆவது இடத்திற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் இடம் பெற்றுள்ளன.

Tap to resize

Latest Videos

என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த ஒரு நாள் போட்டி இது – மேக்ஸ்வெல்லின் அதிரடிக்கு சச்சின் பாராட்டு!

நியூசிலாந்து வெற்றி பெற்றால்…

இதில், நியூசிலாந்து அணியானது கடைசி போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் நியூசிலாந்து இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு….

பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேற 2 வழிகள் உள்ளது. ஆனால், இதெல்லாம் நடந்தால் மட்டுமே அது சாத்தியம்.

காட்சி 1:

நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றாலும் சரி, அல்லது இந்தப் போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை என்றாலும் சரி பாகிஸ்தானுக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும்.

இதே போன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற வேண்டும்.

England vs Netherlands: தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இங்கிலாந்து – டாஸ் வென்று பேட்டிங்!

காட்சி 2:

இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று…

இங்கிலாந்து அணியை 130 ரன்கள் + அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தினால், அரையிறுதிக்கு வாய்ப்பு உண்டு.

இதெல்லாம் நடந்தால் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ஷமி நன்றாக விளையாடினால், நல்லா சம்பாதிப்பார் – மகளுக்கு உதவியாக இருக்கும் – முன்னாள் மனைவி ஹசின் ஜஹான்!

ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு…:

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் நெட் ரன் ரேட் மற்றும் 10 புள்ளிகள் அடிப்படையில் 4ஆவது இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பு பெற்றிருக்கும். ஆனால், தோல்வி அடைந்துள்ளது. எனினும், கடைசி வாய்ப்பாக நாளை மறுநாள் 10ஆம் தேதி நடக்கும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அல்லது அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணிக்கு வாய்ப்பிருக்கிறது.

ஆனால், அதற்கு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் கடைசி போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும்

நெதர்லாந்து கடைசி வாய்ப்பு:

இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் மார்ஜின் மற்றும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் நெதர்லாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அமையும்.

ஆனால், அதற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தங்களது கடைசி போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளென் மேக்ஸ்வெல்லின் 201 ரன்கள் சாதனைக்கு தோனி தான் காரணமா? திகைக்க வைக்கும் பின்னணி காரணம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதன் மூலமாக 3ஆவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அதோடு, வரும் 16ஆம் தேதி நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!