ODI World Cup Semi Finals: 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு யார் யாருக்கு இருக்கு?

By Rsiva kumar  |  First Published Oct 31, 2023, 8:24 PM IST

2023 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி எந்தெந்த அணிக்கு இருக்கிறது என்றால் கிட்டத்தட்ட இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.


இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இடம் பெற்ற 10 அணிகளும் இதுவரையில் தலா 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்திய அணி மட்டுமே விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்திலும், நியூசிலாந்து 4 போட்டிகளில் வெற்றி பெற்று 3ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா விளையாடி 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது.

Pakistan vs Bangladesh: வேகத்தில் மிரட்டிய ஷாகீன் அஃப்ரிடி – வங்கதேசம் 204 ரன்களுக்கு ஆல் அவுட்!

Tap to resize

Latest Videos

வங்கதேச அணி 9ஆவது இடத்திலும், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து 10ஆவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில், தான் தற்போது பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 31 ஆவது லீக் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

Pakistan vs Bangladesh, Shaheen Afridi: முகமது ஷமி, டிரெண்ட் போல்ட் சாதனையை முறியடித்த ஷாகீன் அஃப்ரிடி! 

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கும். அப்படியில்லை என்றால், அரையிறுதி வாய்ப்பு அவ்வளவு தான். சரி, எந்தெந்த அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது என்று பார்க்கலாம். உலகக் கோப்பையில் புள்ளிப்பட்டியிலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அதாவது, ஒரு அணி குறைந்தது 14 புள்ளிகள் பெற வேண்டும். அதாவது, 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

Pakistan vs Bangladesh: ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி ஷாகீன் அஃப்ரிடி சாதனை!

அந்த வகையில் இந்தியா 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகள் பெற்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளும் தலா 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இன்னும் 3 போட்டிகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். அப்படியென்றால் இந்தியாவிற்கு 14 புள்ளிகள் கிடைக்கும்.

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் – டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!

இதே போன்று, தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகள் அல்லது ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 14 அல்லது 12 புள்ளிகள் பெறும். மேலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட 6 புள்ளிகள் என்று மொத்தமாக 14 புள்ளிகள் பெறும்.

இந்தியா – 1 வெற்றி என்றால் – 14 புள்ளிகள்

தென் ஆப்பிரிக்கா 2 வெற்றி என்றால் – 14 புள்ளிகள்

நியூசிலாந்து 3 வெற்றி என்றால் – 14 புள்ளிகள்

ஆஸ்திரேலியா 4 வெற்றி என்றால் – 14 புள்ளிகள்

குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தும் முகமது ஷமி!

புள்ளிப்பட்டியலில் ஆப்கானிஸ்தான் 6 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும், இலங்கை 4 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திலும், நெதர்லாந்து 4 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் அடுத்த 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து தான் இந்த அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு அமையும்.

7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி – புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறிய ஆப்கானிஸ்தான்!

2023 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பு:

இந்தியா – 99.9%

தென் ஆப்பிரிக்கா – 95%

நியூசிலாந்து – 77%

ஆஸ்திரேலியா - 75%

ஆப்கானிஸ்தான் - 32%

பாகிஸ்தான் - 7%

இலங்கை - 7%

நெதர்லாந்து - 6%.

வங்கதேசம் - 0.7%.

இங்கிலாந்து - 0.4%.

 

2023 World Cup Semi Finals chances:

India - 99.9%.
South Africa - 95%.
New Zealand - 77%.
Australia - 75%.

Afghanistan - 32%.
Pakistan - 7%.
Sri Lanka - 7%.
Netherlands - 6%.
Bangladesh - 0.7%.
England - 0.4%.

— Mufaddal Vohra (@mufaddal_vohra)

 

click me!