ஐபிஎல் டிராபியில் பொறிக்கப்பட்ட சமஸ்கிருத வாசகத்திற்கு திறமை வாய்ப்புகளை சந்திக்கும் களம் என்பது தான் அர்த்தம் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் 16ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் ஃபைனல் 2023 இன்று இரவு நடக்கிறது. குஜராத்தின் கோட்டை என்று சொல்லப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கிறது.
ஃபேவரைட் ஐபிஎல் டீம் எது? கண்டிப்பா அது சென்னை டீம் தான்: வைரலாகும் சத்குரு வீடியோ!
இதுவரையில் நடந்த 14 லீக் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த முதல் குவாலிஃபையர் சுற்று போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்று 2ஆவது குவாலிஃபையர் போட்டியில் விளையாடியது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டி முன்னேறியது.
ஐபிஎல் 2023 மூலமாக நீதா, முகேஷ் அம்பானிக்கு கிடைத்த வருமானம் ரூ.100 கோடி!
இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஐபிஎல் 14 லீக் போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த முதல் குவாலிஃபையர் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலமாக 10ஆவது முறையாக சிஎஸ்கே இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
ஒரு கேப்டனாக தோனி 10ஆவது ஐபிஎல் ஃபைனலில் விளையாடுகிறார். மேலும், இது இவரோட 11ஆவது ஐபிஎல் ஃபைனல். இது ஹர்திக் பாண்டியாவின் 6ஆவது ஐபிஎல் ஃபைனல். இன்றைய போட்டியில் விளையாடுவதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 250 ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை தோனி படைப்பார்.
தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் சாதனை படைப்பாரா தோனி?
கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் 2ஆவது முறையாக இன்றைய போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக இரு அணிகளும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் போராடுவது ஐபிஎல் டிராபிக்காகத்தான். அப்படி அந்த ஐபிஎல் டிராபியில் என்ன இருக்கிறது என்று தெரிந்தால் அசந்து போய்விடுவீர்கள்.
IPL 2023 Final CSK VS GT: சென்னையா? குஜராத்தா? எந்த அணி வெற்றி பெறும்?
தொடக்கத்தில் ஐபிஎல் டிராபியில் இந்திய வரைபடம் மற்றும் பேட்ஸ்மேன் பந்தை அடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சில மாறுதல்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஐபிஎல் டிராபியில் சமஸ்கிருத வாசகம் பொறிக்கப்பட்டது. இந்திய வரைபடத்திற்கு அருகில் சமஸ்கிருத வாசகம் பொறிக்கப்பட்டது.
யாத்ர பிரதிப அவ்சர ப்ரப்னோதிஹி என்பது தான் அந்த வாசகம். இந்த வாசகத்திற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், திறமை வாய்ப்புகளை சந்திக்கும் களம் என்பது ஆகும். ஒவ்வொருவருக்கும் இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் முயற்சி தான் இந்த ஐபிஎல். ஒவ்வொரு வீரருக்கும் இருக்கும் திறமை இந்த ஐபிஎல் தொடர் மூலமாக வெளிப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.