ஃபேவரைட் ஐபிஎல் டீம் எது? கண்டிப்பா அது சென்னை டீம் தான்: வைரலாகும் சத்குரு வீடியோ!

By Rsiva kumar  |  First Published May 28, 2023, 6:06 PM IST

தனக்கு பிடித்தமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான் என்று கூறும் சத்குருவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா முடியும் நேரம் வந்துவிட்டது. பதினாறாவது ஐபிஎல் சீசனுக்கான இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில், எந்த அணி டைட்டில் கைப்பற்றும் என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

ஐபிஎல் 2023 மூலமாக நீதா, முகேஷ் அம்பானிக்கு கிடைத்த வருமானம் ரூ.100 கோடி!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், சத்குரு மற்றும் கிறிஸ் கெயில் பேசும் பழைய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிறிஸ் கெயில், உங்களுக்கு பிடித்த ஐபிஎல் டீம் எது என்று கேட்கிறார்? அதற்கு சத்குருவோ அது கண்டிப்பா சென்னை டீம் தான் என்கிறார். நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன். கடந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு வந்த போது, தங்களது அணியை வாழ்த்துமாறு கூறினார்கள். நான், எதிரணி எது என்று கேட்டேன். அவர்கள், சென்னை என்றார்கள். உடனே நான் என்னால் முடியாது என்று கூறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் சாதனை படைப்பாரா தோனி?

மேலும், பிடித்தமான வீரர் தோனி என்றும் கூறியுள்ளார். அந்த வீடியோவின் இறுதியில், ஐபிஎல்லில் சென்னை தான் நம்பர் ஒன் டீம் என்று கிறிஸ் கெயில் கருத்து தெரிவிக்கிறார். அதற்கு சத்குரு தோனி மாற்றத்தை ஏற்படுத்துகிறார் என்று சுட்டிக்காட்டுகிறார். இந்த சீசனில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடந்த ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் விளையாடிய போட்டி மற்றும் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்த சென்னை மற்றும் ஆர்ஆர் அணிகள் போட்டியை நேரில் கண்டு பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2023 Final CSK VS GT: சென்னையா? குஜராத்தா? எந்த அணி வெற்றி பெறும்?

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sadhguru (@sadhguru)

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sadhguru (@sadhguru)

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sadhguru (@sadhguru)

 

click me!